மேலும் அறிய

ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு

மத்திய அரசின் முழுமையான பாதுகாப்புடன் செயல்படும் இந்த காப்பீட்டு திட்டங்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மிகக் குறைந்த பிரீமியம் தொகையில், அதிகபட்ச போனஸ் வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டுக்கான சிறப்பு முகாம்கள் வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது என்று தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால்துறை பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து ஆதார் சேவை, பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல பயனுள்ள சேவைகளை தொய்வின்றி வழங்கி வருகிறது. குறிப்பாக, தபால்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களிடையே இந்த சேவைகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

விரிவுப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம்

முன்னதாக, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI) தற்போது தகுதியுடைய அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட கல்வித்தகுதிகளைப் பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

அதேபோல், கிராமப்புற மக்களின் வாழ்வாதார பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் 'கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம்' (RPLI) சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குறைந்த பிரீமியம் - அதிக போனஸ்

மத்திய அரசின் முழுமையான பாதுகாப்புடன் செயல்படும் இந்த காப்பீட்டு திட்டங்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் மிகக் குறைந்த பிரீமியம் தொகையில், அதிகபட்ச போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், இது பங்குச் சந்தை ஏற்ற இறக்க அபாயங்கள் இல்லாத, முற்றிலும் பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக விளங்குகிறது.

ரூ.278 கோடி மதிப்பிலான பாலிசிகள் விநியோகம்

தஞ்சை தபால் கோட்டத்தில் இத்திட்டம் மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் தஞ்சை கோட்டத்தில் புதிதாக 7,800 பயனாளர்கள் இக்காப்பீட்டு திட்டங்களில் இணைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.6.56 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு ரூ.278 கோடி மதிப்பிலான காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி விலக்கு

மேலும், மத்திய அரசின் தபால் ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (GST) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையின்றி, குறைந்த பிரீமியத்தில் அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்.

எனவே, தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருகிற 25ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, தங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி காப்பீட்டு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
ஆற்றில் சரித்திர பதிவேடு குற்றவாளி சடலமாக மீட்பு – உடலை வைத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
உயிருக்கு உலை வைக்கும் சக்கரா வாய்க்கால்! அதிகாரிகளே, எப்போது தடுப்புச்சுவர் கட்டப்போகிறீர்கள்?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget