தஞ்சாவூர்: 10வது தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களுக்கும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கு. அட ஆமாங்க. உங்களுக்கு இது தீபாவளி பரிசு போல. விருதுநகர் கோர்ட்டில் பியூன், கிளார்க் வேலையை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கு.
விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்வு இல்லாத அரசு வேலை! எழுத்தர், பியூன் உட்பட 5 காலியிடங்கள். நேர்காணல் மட்டும். 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க.
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விருதுநகர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல், நேரடி நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலருக்கும் ஏற்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட சேவைகள் ஆணையத்தில் மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (Assistant Legal Aid Defense Counsel) - 1அலுவலக உதவியாளர் / எழுத்தர் (Office Assistant/ Clerk) - 1வரவேற்பாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Receptionist & DEO) - 1அலுவலக பியூன் (Office Peon) - 2
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.
பியூன்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் (SSLC Fail/Pass) விண்ணப்பிக்கலாம்.
எழுத்தர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். கணினி மற்றும் டைப்பிங் தெரிந்திருப்பது அவசியம்.
உதவி சட்ட ஆலோசகர்: குற்றவியல் சட்டத்தில் (Criminal Law) 1 முதல் 3 ஆண்டுகள் வரை வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://virudhunagar.dcourts.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்வி மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, பதிவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ADR கட்டிடம், மாவட்ட நீதிமன்ற வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கடந்த 7.10.2025ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24.10.2025ம் தேதி.
கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பித்து இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். எனவே உடனடியாக விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.