தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு சிறப்பு பேருந்து வசதிகள்... நிர்வாக இயக்குனர் தகவல்
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், மூலமாக பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, பெரம்பலூர், துறையூர், கரூர் புதுக்கோட்டை, காரைக்குடி, பேருந்துகள் ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் செல்லும் நடைமேடை எண் 5-லும்), கும்பகோணம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -7-லும்).
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் நடைமேடை எண் -8-லும்) ஆகிய ஊர்களுக்கு 16.10.2025 அன்று 82 கூடுதல் பேருந்துகளும், 17.10.2025 அன்று 702 கூடுதல் பேருந்துகளும், 18.10.2025 அன்று 652 கூடுதல் பேருந்துகளும், 19.10.2025 அன்று 252 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்களின் ஊர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும். மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 16.10.2025 அன்று 150 கூடுதல் பேருந்துகளும், 17.10.2025 & 19.10.2025 ஆகிய நாட்களில் 900 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 21.10.2025, 22.10.2025, & 23.10.2025 ஆகிய 3 நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல பயணிக்க பயணிகள் செய்து முன்னதாகவே முன்பதிவு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும்.
எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நிர்வாக இயக்குநர் தசரதன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு பிற மாவட்டங்களில் தொழில் நிமித்தமாகவும், வேலையும் செய்பவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக இந்த சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் பயணிகள் பேருந்தில் நெரிசலுடன் செல்வது தவிர்க்கப்படும். மேலும் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.





















