சாக்பீசை கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் கிராமத்தில் ஜரூராக

  தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  இந்த சாக்பீஸ் தயாரிக்கும் பணி திருப்புறம்பியம் மற்றும் உக்கரை கிராமம், அய்யம்பேட்டை, தாராசுரம், நாச்சியார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் பல பள்ளிகளில் கரும்பலகை பதிலாக ஸ்கெட்ச் வைத்து எழுதும் பிளாஸ்டிக் பலகையை வைத்துள்ளார்கள். கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாததால், சாக்பீஸ் தொழில் மிகவும் முடங்கி விட்டது. இதனால் சுமார் நேரிடையாக 100க்கும் மேற்பட்டோரும், மறை முகமாக 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.




இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து இயங்குவதால், சாக்பீஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது. சாக்பீஸ் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களின் விலை ஜிஎஸ்டி போன்ற காரணத்தால் உயர்ந்துள்ளதால், சாக்பீஸ் பெட்டியின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் சாக்பீஸை மட்டும் பயன்படுத்த வேண்டும், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து திருப்புறம்பியத்தை சோ்ந்த நடராஜன் கூறுகையில், சாக்பீசின் தாயகம் கும்பகோணம் தான் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கடலில் உருவாகம் ஒரு வகை உப்பை வைத்து சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. முதலாவதாக கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் கிராமத்தில் தான் சாக்பீஸ் தயாரித்தார்கள். அதன் பின் அருகில் உள்ள ஊர்கள், கிராமங்கள் பரவியது. இப்போது திருப்புறம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் சாக்பீஸின் தேவை குறைந்ததால் பல குடும்பத்தினா்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்யது வருகின்றார்கள்.




ஒரு காலத்தில் கும்பகோணம் பகுதியில் தயாரிக்கப்படும் சாக்பீஸ் ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்க பிறகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மற்ற மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.   ஒரு டப்பாவில் 144 எண்ணிக்கை இருக்கும், அதன் விலை ரூ 30 மட்டும். இந்த சாக்பீசில் சிகப்பு, பச்சை, ஊதா, காவி, பான்டா உள்ளிட்ட பல கலர்களில் தயாரிக்கின்றோம்.


மேலும் பிளாஸ்டிக் போர்டில் எழுதும் மார்க்கர் உள்ள கெமிக்கல் உடல நலத்திற்கு கேடு விளைப்பதால் மாணவா்கள் தெரியாமல் மூக்கில் முகா்ந்தால் பலவிதமான உடல்உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு ஸ்கெட்ச்சில் எழுதுவதை தடை செய்ய வேண்டும்,  பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கரும்பலகை வைத்த சாக்பீஸ் உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்திரவிட வேண்டும், சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பற்றாகுறையாக இருப்பதால், அதனை உரிய முறையில் கிடைப்பதற்கும், சாக்பீஸ் தொழிலை ஊக்கும் விதமாக  சிறு தொழில் ஆக அறிவித்து வங்கி கடன் வழங்க வேண்டும் என்றார்.