மேலும் அறிய

வேலை இல்லைன்னு கவலையா..? ரூ.50 லட்சம் வரைக்கும் கிடைக்கும்... நீங்க ரெடியா? என்ன விபரம்ன்னு பாருங்க!!!

நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை.

தஞ்சாவூர்: வேலை இல்லைன்னு கவலையா... நீங்களே முதலாளியாகலாம்ங்க. அட ஆமாங்க. உழைக்க தயாரா... அரசு உங்களுக்கு உதவ ரெடியாக இருக்கு. கோழி மற்றும் ஆடு பண்ணை அமைக்க 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது. அதோட முழு விவரம் இதோ உங்களுக்காக...

அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உங்களை மேலும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க. வேலை இல்லையே என்று வருத்தப்படுவதை விட்டு நீங்கள் பலருக்கு வேலை வழங்கும் வாய்ப்பு.

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்களை உருவாக்கிவிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021 - 2022 ஆம் நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது.

புதிய கோழிபண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின் வழி மாநிலத்தின் இறைச்சி, மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்ப பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய் புல், மொத்த கலப்பு உணவு (TMR), தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

https://nlm.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnlda.tn.gov.in/என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் http://www.tnida.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். செம வாய்ப்புங்க... மிஸ் பண்ணாதீங்க. தொழில் முனைவோர்களாக மாறி உங்கள் திறமையை நிரூபியுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget