தஞ்சாவூர்: செம சூப்பர் சான்ஸ் வந்திருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க. ஆமாங்க. நாகை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலா் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ளவா்கள் வரும் 10-ம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள். 

Continues below advertisement

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாகை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மின் வட்சல்யா திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடத்துக்கு மாதம் ரூ. 27,804 தொகுப்பூதியத்தில், முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, சமூகவியல், குழந்தை வளா்ச்சி, மனித உரிமை, பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலை பட்டம் அல்லது மேற்கண்ட படிப்புகளில் இளநிலை பட்டத்துடன் திட்ட உருவாக்கம், சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தை வளா்ச்சியில் செயல்பாடுகள், கண்காணிப்பு, மேற்பார்வை ஆகியவற்றில் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

Continues below advertisement

மேற்கண்ட தகுதியுள்ள 42 வயதுக்குட்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைப்பது மிகவும் முக்கியம். உங்களின் விண்ணப்பங்களை  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகப்பட்டினம் - 611003 என்ற முகவரிக்கு வரும் 10.11.25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04365 253018 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரமே உள்ளதால் காலதாமதம் செய்யாமல் தகுதியும், திறமையும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறலாம். நாட்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே மிஸ் பண்ணிடாதீங்க.