தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

திருவையாறு அருகே கண்டியூர் முதன்மைச் சாலையைச் சேர்ந்தவர் ஏ. வீரமணி (65). முன்னாள் ராணுவ வீரர். இவர் பிளஸ் 1 படிக்கும் 16 வயது சிறுமியை கடந்த ஜூலை மாதம் முதல் பாலியல் கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டதால், அவரை பெற்றோர் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது,  அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.

Continues below advertisement

திருவிடைமருதூரிலும்...

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் படித்து வரும், 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வரும் 18 வயது மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில், மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர், திருவிடைமருதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது, மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளனர்.

இதில் கல்லுாரியில் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில், அந்த கல்லுாரி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்றுமுன்தினம் மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் தஞ்சை மாவட்டத்தில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதேபோல், திருபுவனத்தைச் சேர்ந்த, தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயது மாணவியும், அதே பள்ளியில் படித்தவரும் தற்போது மயிலாடுதுறையில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்து வரும் 18 வயது மாணவனும், ஏற்கனவே பள்ளியில், நண்பர்களாக பழகியுள்ளனர். தற்போது, இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்ததால் பழகியுள்ளனர். இதையடுத்து அந்த மாணவியின் உடலில் மாற்ற ஏற்பட, மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லுாரியில் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாணவியின் பெற்றோர் திருவிடைமருதுார் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில், அந்த கல்லுாரி மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பள்ளிக்கு அனுப்பும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், ஆசை வார்த்தையும், மிரட்டியும் பெண் குழந்தைகளை இதுபோன்று பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.