மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீவரன் கோவிலில் கோவிலார் வடிகால் ஆறு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த 2280 ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான வடிகாலாகவும், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் உள்ள 2000 குடியிருப்புகளுக்கு வடிகாலாகவும் இந்த கோவிலார் வடிகால் ஆறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த கனமழையின் போது ஆற்றில் புதர்கள் மண்டியும், ஆக்கிரமிப்புகளும் இருந்ததால் இந்த வடிகாலில் தண்ணீர் செல்ல முடியாமல் 1000 ஏக்கர் சம்பா சாகுபடியும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வெள்ளநீர் புகுந்து பெரிய அளவில் பாதிக்கபட்டது. 




இதுபோன்ற பாதிப்புகளின் போது மட்டுமே  ஆற்றை தற்காலிகமாக தூர்வாரி தண்ணீரை அப்புறபடுத்திய பொதுப்பணிதுறையினர் அதன் பின்னர்  கோவிலார் வடிகாலை முழுமையாக தூர்வாரவில்லை. இதனால் ஆற்றின் மேற்கு பகுதி முழுவதும் ஆகாயதாமரை, செடி கொடிகள் அதிகளவில் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த சூழலில் மேட்டூர் அணையில் கடந்த ஜீன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு நிலையில் மழையும் அவ்வப்போது பொழிந்து வருகிறது. ஆனால் கோவிலார் வடிகால் ஆற்றிலோ தண்ணீர்  வடிய வழியில்லாமல் கோரைப்புல்,  ஆகாய தாமரை காடு போல் வளர்ந்துள்ளது.




 


அதிக மழை வந்தால் உபரிநீர் வடிகால் செல்லாமல் விவசாயமும் குடியிருப்புகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக கோவிலார் வடிகால் ஆற்றில் ஆக்கிரமைப்புகளை அகற்றியு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பெரும்பாலும் காவிரி நீரை நம்பாமல் நிலத்தடி நீரை மட்டுமே வைத்து ஆண்டுதோறும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் தங்களுக்கு  தொடர்ந்து ஆண்டுதோறும் வாய்க்கால் முறையாக தூர் வாராமல் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் முழுவதுமாக மூழ்கி வெள்ள நீர் முறையாக வடிய வடிகால் இன்றி  பெரும் இழப்புகளை சந்தித்து வருவது வாங்க வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் தற்போது புதிதாக ஆட்சி அமைந்துள்ள அரசு விவசாயிகளின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் வாய்க்காலில் உள்ள செடி கொடிகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுத்துள்ளனர்.


 


மயிலாடுதுறை: புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று! உயிரிழப்பு இல்லை!