தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடிக்கு ஏன் அந்த பெயர் வந்தது என்று தெரியுங்களா? தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது என்கின்றனர்.

Continues below advertisement

ஆலங்குடி என்றாலே அனைவருக்கும் குரு பகவான்தான் ஞாபகத்திற்கு வருவார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலங்குடி குருபகவான் கோயில். இக்கோயில் ஆபத்சகாயேஸ்வரரை ஒருமுறை வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.

அதுமட்டுமா? தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது என்கின்றனர். நவக்கிரகத் தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு பரிகார தலமாக உள்ள இந்த கோயிலின் ஸ்பெஷல் பற்றி பார்ப்போம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்ததாம்.

Continues below advertisement

இந்த ஊரில் விஷத்தால் எவருக்கும் எந்த வித தீங்கும் உண்டாவதில்லை என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. கருநிறம் உள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால், இந்த ஸ்தலம் திருஇரும்பூளை என்றும் அழைக்கப்படுகிறது. குருபகவான் ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்பதும் மற்றொரு ஸ்பெஷல்.

தேவாரப் பாடலில் இடம் பெற்ற காவிரி தென்கரை ஸ்தலங்களில் இது 98வது ஸ்தலமாகும். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாவார். இறைவி அம்மையார் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்கிரவார அம்பிகை. சுக்கிரவாரம் என்பது வெள்ளிக்கிழமை அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளியின் பெயரைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் அமைப்பு வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது அம்மன் சன்னதி, அடுத்து சுவாமி சன்னதி இரண்டையும் பார்க்கலாம். அதன் பிறகு குரு சன்னதி இருக்கும், அதாவது மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இக்கோயில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஸ்தலத்தில் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்தில் உள்ளார். மேலும் இது குரு தக்ஷிணாமூர்த்தி பரிகார ஸ்தலமாகும். தக்ஷிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார், ஆபத்சகாயேஸ்வரர், அவரை ஓரமாக வந்து கரையேற்றி காட்சி தந்தார் என்பது ஸ்தல வரலாறு.

அப்போது நிலைதடுமாறி பாறையில் மோதியபோது அவரைக் காத்த விநாயகர், கலங்காமல் காத்த பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இப்படி தொடர்ந்து பல பெருமைகளை ஸ்பெஷலாக கொண்டு விளங்குகிறது ஆலங்குடி குரு கோயில்.