தஞ்சாவூர்: திருவிடைமருதூர் தொகுதி்யில் திமுக வெற்றி பெற்றது. தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றார்.
திருவிடைமருதூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோவி.செழியன் வெற்றி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றார். திருவிடைமருதூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 14 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,56,930 வாக்குகளில், 2,08,197 வாக்குகள் (தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் 79,951 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் பிரபாகரனை காட்டிலும் 14,116 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் தவெக வேட்பாளர் பிரபாகரன் 65,835 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் 52,922 வாக்குகளும், நாதக வேட்பாளர் திவ்யபாரதி 6,363 வாக்குகளும் பெற்றனர்.
பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜகான் வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் அசாரூதீன் உதுமான் அலி இரண்டாம் இடம் பெற்றார்.
பாபநாசம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக, தவெக, நாதக கட்சி என 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,56,518 வாக்குகளில், 2,06,130 வாக்குகள் (தபால் வாக்குகள் உட்பட) பதிவானது. 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஷாஜகான் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தபடியாக வந்த தவெக அசாரூதீன் உதுமான் அலி விட 1,065 வாக்குள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதில் தவெக அசாரூதீன் உதுமான் அலி 68,219 அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபு 57,072 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ்பாத்திமா 9,604 வாக்குகள் பெற்றனர்.
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ இரண்டாமிடம் பெற்றார். இந்த தொகுதியில் 10 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,13,946 வாக்குகளில், 1,74,973 வாக்குகள் பதிவாகின. 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் நா.அசோக்குமார் 60,485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோவை விட 3,105 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதில் அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ 57,380 வாக்குகளும், தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் 45,192 வாக்குகளும், நாதக வேட்பாளர் புவனா 9,036 வாக்குகளும் பெற்றனர்.
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் மதன் இரண்டாமிடம் பெற்றார். இந்த தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 11 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,42,420 வாக்குகளில், 1,83,116 வாக்குகள் பதிவானது. 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை 65,761 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தனக்கு அடுத்தப்படியாக வந்த தவெக வேட்பாளர் மதனை விட 13,701 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இதில் தவெக வேட்பாளர் மதன் 52,060 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிவி.சேகர் 49,354 வாக்குகளும், நாதக வேட்பாளர் கண்ணன் 13,101 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
