மேலும் அறிய

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்: விரிவான கால அட்டவணை வெளியீடு

மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வருகிற ஜூன் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

தஞ்சாவூர்: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான (2026–2027) மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் தொடங்கி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வருகிற ஜூன் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் நடைபெறும் கலந்தாய்வுக்கான தேதிகள், மதிப்பெண் வாரியான விவரங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வு விவரம்

இக்கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பின்வரும் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது:

1. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு:
ஜூன் 5 (இன்று) & ஜூன் 6 (சனிக்கிழமை):
விளையாட்டுத் துறை, தேசிய மாணவர் படை (NCC), முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான முதலாம்கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

2. பொதுப் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு (மதிப்பெண் அடிப்படையில்):
ஜூன் 8 (திங்கட்கிழமை): 400 முதல் 301 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை): 300 முதல் 271 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
ஜூன் 10 (புதன்கிழமை): 270 முதல் 251 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
ஜூன் 11 (வியாழக்கிழமை): 250 முதல் 231 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.

3. தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வு (பகுதி-1):

ஜூன் 12 (வெள்ளிக்கிழமை): தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 100-க்கு 50 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

4. இரண்டாம் கட்டப் பொதுக் கலந்தாய்வு:

ஜூன் 15 (திங்கட்கிழமை): 230 முதல் 216 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
ஜூன் 16 (செவ்வாய்க்கிழமை): 215 முதல் 201 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
ஜூன் 17 (புதன்கிழமை): 200 முதல் 140 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
5. தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வு (பகுதி-2):
ஜூன் 18 (வியாழக்கிழமை): தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 49 முதல் 35 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி கலந்தாய்வு விவரம்

அரசு மகளிர் கல்லூரியில் பயில விண்ணப்பித்துள்ள மாணவிகளுக்கான கலந்தாய்வு அட்டவணை:

ஜூன் 5 (இன்று): விளையாட்டு, என்.சி.சி (NCC), மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவிகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு.

ஜூன் 8 (திங்கட்கிழமை): அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 400 முதல் 250 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள். மேலும், தமிழ், சிறப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கு 50 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவிகள்.

ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை): பொதுப் பாடப்பிரிவுகளில் 249 முதல் 399 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் மற்றும் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் 49-க்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவிகள்.

ஜூன் 10 (புதன்கிழமை): அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பித்துள்ள மீதமுள்ள அனைத்து மாணவிகளுக்குமான பொதுக் கலந்தாய்வு.

மாணவர்கள் கவனத்திற்கு!

கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவிகள் பின்வரும் ஆவணங்களைக் கட்டாயம் தவறாமல் எடுத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்:

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் (Application Copy)
அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள் (Original & Xerox Certificates)
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (Passport size photos)
சேர்க்கைக் கட்டணம் (Admission Fee)

குறிப்பிட்ட தேதிகளில், தங்களுக்குரிய மதிப்பெண் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Embed widget