மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு என்பது ஆயிரம் ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அதனை தொடர்ந்து புதிய காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற காரணங்களால் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.




இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள 15 நாள் சம்பா பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வயல்களில் இதுபோன்ற வெள்ளம் சூழும் போதெல்லாம் அருகில் செல்லும் எல்லை வாய்க்காலில் வடிகாலாக தண்ணீர் சென்று விடும். ஆனால் திருமங்கலத்தில் இருந்து கங்கணம்புத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் செல்லும் எல்லை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. தூர் வாராப்படாத காரணத்தால் தற்போது பெய்த மழையில் தண்ணீர் செல்ல வழியின்றி வயல் முழுவதும் நீரில் மூழ்கி சம்பா சாகுபடி செய்த நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


கடந்த சில ஆண்டுகளாக பெருமழை காலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் இப்பகுதி விவசாயிகள் சிலர் இந்த ஆண்டு ஒன்றிணைந்து தாங்களே 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்கள் பகுதியில் எல்லை வாய்க்காலை தூர்வாரி உள்ளனர். இருப்பினும், பல்வேறு கிராமங்களில் வழியே செல்லும் வாய்க்கால் முழுவதும் தூர்வாரப்படாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக எல்லை வாய்க்காலை தூர்வாரி அழுக தொடங்கியுள்ள தங்கள் பயிர்களை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்கள் தாமதித்தால்கூட தங்கள் பயிர்களை சிறிதளவுகூட காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றும், அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


IIT JEE Advance Results: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது - டெல்லியைச் சேர்ந்தவர் முதலிடம்..!