புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாகையில் மாவட்ட காங்கிரஸ் SC துறை சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

 

நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமிர்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை செயலை கண்டித்தும், குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்து 31 நாட்கள் ஆன நிலையில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிர படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

இதில் மாவட்ட காங்கிரஸ் SC துறை தலைவர் ராஜ்குமார், நாகை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் உதய சந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர் ஜமாலுதீன், கீவலூர் வட்டார தலைவர் சிங்காரவேல், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராசு, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுவர்தன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.