நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி ஊராட்சி பெரிய கூட குடியை சேர்ந்தவர் அறிவழகன் மகன் தரணிகுமார் (27).  சாராய வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரிய மூக்கால்வட்டம் மற்றொரு சாராய கடத்தலில் ஈடுபட்டு வரும் காளமேகம் மகன் ஹரிகரன் (27) என்பவருக்கும் சாராய கடத்தலில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்துள்ளது. தரணிகுமாருக்கும் ஹரிகரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில், ஹரிஹரன் செம்பியன் மாதேவி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருடி, குண்டாஸ் வழக்கில் கைதாகி சில தினங்களுக்கு முன்பு சிறை சென்று வந்துள்ளார். இதனிடையே தரணிகுமாருக்கும் ஹரிக்கும் இன்று தகராறு ஏற்பட்டுள்ளது.

 



 

இதனால் பலத்த காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் தரணி குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஹரிகரன் நாகையில் இருந்து 10 பேர் கொண்ட கும்பலுடன் ஆயுதங்களோடு தரணிக்குமாரின் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தரணிக்குமாரின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் ராஜா (எ) முருகையன், செல்வராஜ், ஜோதிபாஸ், சுதாகர், சரண்யா உள்ளிட்டோர் வெட்டு காயங்களுடன் படுகாயம் அடைந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் திருக்கண்ணங்குடி ரயில்வே கேட் அருகே நிறுத்தி இருந்த 2 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றதால், இரு சக்கர வாகனங்கள் பற்றி எரிந்து அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தப்பிச் சென்றது.

 



 

வெட்டு காயமடைந்த 5 நபர்களும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவ இடத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டு மோதல் நடந்த இடத்தில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

 

 



கீவளூர் அருகே காக்கழனியில் வீட்டுக்குள் புகுந்த 12 அடி நீள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு படை வீரர்கள்

 

சென்னையில் காவல்துறையில் ஐஜியாக பணிபுரியும் முருகன் என்பவரது வீடு நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே காக்கழனி  மாரியம்மன் கோவில் அருகே உள்ளது அங்கு அவரது தாயார் சரஸ்வதி வசித்து வருகிறார். வீட்டின் அருகே ஆற்றுப் பகுதி மற்றும் மூங்கில் காடு, காட்டுக் கருவை முட்கள் காடு உள்ளது இங்கு அடைந்து இருக்கும் பாம்புகள் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகி வருகிறது.இன்று திடீரென சரஸ்வதியின் வீட்டில் 12 அடி நீள சாரை பாம்பு புகுந்தது இதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் வீரத்தமிழன் என்பவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததோடு பாம்பு வேறு எந்தப் பகுதிக்கும் செல்லாதவாறு பாம்பை கண்காணித்தவாறு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் வரும்வரை பாம்பின் அருகிலேயே நின்றிருந்தார்.



 

இதனை தொடர்ந்து  அங்கு விரைந்து வந்த கீழ்வேளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாம்பு பிடிக்கும் நவீன கருவி மூலம் லாகவமாக  பாம்பை உயிருடன் பிடித்து அவர்கள் தயாராக எடுத்து வந்த சாக்கு பையில் அடைத்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.