மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தவர் கு.குகன். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த குகன்   பணிக்காலத்தில் பல்வேறு வகையான  திட்டங்களை வைத்தீஸ்வரன் கோயில் பகுதிக்கு கொண்டுவந்து செயல்படுத்தினார்.




சாலை வசதி, மயானத்திற்கு சாலை வசதி , மயான கொட்டகை  சீரமைப்பு, ஈமகிரியை மண்டபம் மற்றும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாகசெய்து பல முறை முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பாராட்டை பெற்றுள்ளார். குப்பை கிடங்கை வளம் மீட்பு பூங்கா என மாற்றி உரங்களை தயார் செய்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.  மேலும் பல்வேறு திட்டங்களை பேரூராட்சி பகுதியில் செயல்படுத்தியுள்ளார், பேரூராட்சிக்கு தனி முகநூல், வாட்ஸ் அப் தொடங்கி மக்களின் குறைகளை அதன் மூலம் நேரடியாக கேட்டறிந்து உடன் தீர்வு கண்டதால் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதி மக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டார்.




அதோடு  கொரோனா காலங்களில் வெளியே சென்று வராமல் பொதுமக்கள் வீட்டிலேயே  இருக்கும் வகையில் அவர்களுக்கு சமையல் போட்டி போன்ற பல்வேறு ஆரோக்கிய போட்டிகளை ஆன்லைன் மூலம் நடத்தி பரிசுகளை வழங்கி முதன்மையாகத் திகழ்ந்தார். அதோடு ஆடிப்பட்டம் தேடி விதை என்று மாடித்தோட்டம் வளர்ப்புக்கு பொதுமக்களிடம் முனைப்பு ஏற்படுத்தினார். வைத்தீஸ்வரன் கோயில் பகுதிக்கு நீண்ட ஆண்டு தேவையாக இருந்து வந்த தனி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிட முயற்சி எடுத்து அதற்கு தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஆம்புலன்ஸ் வாங்கிட பெருமுயற்சி செய்து வெற்றி பெற்றார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X 


இவ்வாறு பொதுமக்களிடமும், அனைத்து அரசியல் கட்சிகளிடமும், அதிகாரிகளிடமும் நற்பெயர் பெற்று செயல்பட்டு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் குகன்,  நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் பணி மாறுதல் உத்தரவு வரப்பெற்று பணி மாறுதலில் சென்றார். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலருக்கு  வைத்தீஸ்வரன் கோவிலில் வழியனுப்பு விழா நடந்தது இந்த விழாவில் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வர்த்தகர்கள் வியாபாரிகள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை மேளதாளங்கள் முழங்க வழியனுப்பி வைத்தனர்.




பேரூராட்சி செயல் அலுவலர் தங்கள் பகுதியை விட்டு மாற்று இடம் செல்வதால் வழியனுப்பு விழாவில் பங்கேற்ற பலர் கண்ணீர் மல்க உணர்ச்சிவசப்பட்டனர். தொடர்ந்து பேரூராட்சியில் பணியாற்றிவரும் ஊழியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று குகன் நன்றியை தெரிவித்து புறப்பட்டு சென்றார்.