தரங்கம்பாடி அருகே மோதிக்கொண்ட வாகனங்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து காரின் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பர் தனது மனைவி மீனாட்சி உடன் உறவினர் திருமணத்திற்காக காரைக்கால் வரை சென்றுள்ளார். தொடர்ந்து திருமணத்தை முடித்துவிட்டு தரங்கம்பாடி வழியாக நாகப்பட்டினம் சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுகைமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் இருந்து ஆக்கூர், திருக்கடையூர் வழியாக நாகப்பட்டினம் செல்லக்கூடிய கும்பகோணம் அரசு பேருக்கு வரத்து கழக பேருந்து ஒழுகைமங்கலம் பகுதியில் உள்ள வளைவில் வேகமாக முந்தி சென்றுள்ளது.
அப்போது, எதிரே வந்த கார் மீது அரசு பேருந்து மோதியதில் காரின் முன் சேதம் அடைந்து அதில் பயணம் செய்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தும் விதமாக அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பேருந்தினை விட்டு தப்பிச்சென்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது அரசு பேருந்து காரின் மீது அதிவேகமாக சென்று மோதக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் மீது மோதும் அரசு பேருந்து, பரபரப்பை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல். pic.twitter.com/ApTKT3GgYP
— JAGANNATHAN (@Jaganathan_JPM) January 24, 2023
தமிழ் வழி, ஆங்கில வழி, கல்வியையே எதிர்பார்ப்பதாகவும், ஹிந்தியை எதிர்பார்க்கவில்லை என ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் தெரிவித்த பெற்றோர்கள்.
தரங்கம்பாடி அருகே ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு கல்வி கொள்கை சார்பில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை வரையறை குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜவகர் நேசன் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்து வெளியிட்ட பின் தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றி, டாக்டர் ஜவகர் நேசன் தலைமையில் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை வரையறை குழு ஒன்றை ஏற்படுத்தியது. புதிய கல்விக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்காக இந்தக் குழுவானது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி அவர்களின் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு வருகை தந்த மாநில கல்விக் கொள்கை குழு, தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கை சார்பில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கருத்து கேட்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி அவசியமா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பெற்றோர்கள் அவசியம் என்றும் கட்டாயம் அரசு பள்ளியில் எல்கேஜி யுகேஜி வேண்டுமென பதிலளித்தனர்.
மேலும் பெற்றோர்கள் தமிழ் வழி ஆங்கில வழி கல்வியையே எதிர்பார்ப்பதாகவும், ஹிந்தியை எதிர்பார்க்கவில்லை என ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதாக தெரிவித்தனர். பின் பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் முறைகளை புதிய கல்விக் கொள்கை குழு ஆய்வு செய்தது, இவ்வாய்வு கூட்டத்தில் ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.