Sathaya Vizha : பொன்னியின் செல்வன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

இராஜ ராஜ சோழன் விழா இந்தாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

Continues below advertisement

தமிழ் மன்னர்களின் மிகவும் முக்கியமானவரும், சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னருமானவர் ராஜராஜசோழன். ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ராஜராஜசோழனின் சதய விழா இனிமேல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஆண்டுதோறும் “சதய விழாவாக மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் நவம்பர் மூன்றாம் நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ மாமன்னர் சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும்.

மேலும், தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் தெரிவித்துக்கொள்கிறேன். என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சதய விழா:

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்திர தினம் சதய விழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக விழா நடைபெறும். சதயவிழா தினத்தில் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை விடப்படும். பெரிய கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும். அந்த வகையில் இந்தாண்டு வரும் 3ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பந்தல் அமைக்கும் பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது.

கோயில் முழுவதும் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. நாளை 2ம்தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது. 3ம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உள்ளூர் விடுமுறை குறித்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதய விழா வரும் 3ம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12ம்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


 

Continues below advertisement