மேலும் அறிய

வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதி பைக் விபத்து... சம்பவ இடத்திலேயே 2 சிறுவர்கள் பலி

வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் அதில் வந்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிமாதா கோயிலில் வேகமாக வந்த பைக் வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதாகோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மிக வேகமாக வந்த பைக் நிலைதடுமாறி வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியதில் அதில் வந்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியாத நிலையில் மறுநாள் (நேற்று) காலை தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் அருகே கடகடப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் அமிதாபச்சன் மகன் சந்தோஷ் (17). இவரது நண்பர் பாபநாசத்தை அடுத்த வேப்பங்குளம் கோயில்தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் திரிசேக் (17). சந்தோஷ் கோவையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். திரிசேக் திருச்சியில் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் லால்குடியில் இருந்து பூண்டி மாதா கோயில் வழியாக நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டு  இருந்தனர். பூண்டி மாதா கோயில் - திருக்காட்டுப்பள்ளி பிரதான சாலை இடையே வந்த போது, சாலையின் வளைவில் வேகமாக பைக்கில் திரும்பியபோது நிலை தடுமாறி லூர்துராஜ் என்பவரின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளனர். 

மறுநாள் நேற்று காலை அவ்வழியாக வயலுக்குச் சென்றவர்கள் பார்த்துவிட்டு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீஸார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்நாள் நள்ளிரவில் நடந்த விபத்து பற்றி யாருக்கும் தெரியாத நிலையில் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக இறந்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாணவி உயிருடன் மீட்பு

மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 12 ம் வகுப்பு மாணவி உயிர் பிழைக்க நீந்திக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்எஸ் வையம்பட்டியை சேர்ந்த மாணவி நாகலெட்சுமி (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே தண்ணீர் தொட்டியில் கை – கால்களை கழுவ சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீர் இருந்த நிலையில் மாணவி நீந்தியபடி ஒரு இடத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி தவறி விழுந்ததை பார்த்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் உடனே கிணற்றில் குதித்து மாணவி பயந்து விடாமல் இருங்க அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வையம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி பள்ளி மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் கிணற்றில் இறங்கிய மற்ற இரண்டு வாலிபர்களும் கயிறு மூலம் கிணற்றில் இருந்து மேலேறி வந்தனர். மாணவியை பாதுகாப்பாக பார்த்துக் கொண்ட வாலிபர்கள் மற்றும் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு... நாளைக்குதான் விண்ணப்பிக்க கடைசி நாள்: மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget