கல்வி அமைச்சர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் வேலையை மட்டும் செய்து வருகிறார் என்று நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். ஒவ்வொரு கோயிலுக்கு சொந்தமான விக்கிரகங்கள் அந்த அந்த கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஒரே கோயிலில் அடைத்து வைத்து பூட்டி வைக்க விக்கிரகம் ஒன்றும் காட்சி பொருள் அல்ல கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள சிலைகள் மீட்கப்பட வேண்டும். 

 



 

சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 5000 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விரிவு படுத்தப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை மட்டும் கற்றுத் தர வேண்டும். கட்சி பிரச்சாரங்கள் நாத்திகப் பிரச்சாரங்கள் செய்ய பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் எந்த பணியும் செய்யவில்லை. உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் வேலையை மட்டும் செய்து வருகிறார். காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியுள்ள ராகுல் காந்தி உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்ற வேதாரண்யத்திற்கு வந்து தொடங்கி இருக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் காங்கிரஸ் முழுமையாக ஓரம் கட்டி விட்டது காங்கிரஸ் கட்சி முழுமையாக அறிவாலயத்தின் கொத்தடிமையாக மாறிவிட்டது என்றார். 

 

 



 


காரைக்காலில் செல்போன் டவரில் உள்ள விலை உயர்ந்த பேட்டரிகளை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 



 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் வீதியில் ஒரு தனியார் வங்கி மேல் தளத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அங்கு இருந்த விலை உயர்ந்த பேட்டரிகளை மர்ம நபர் திருடி உள்ளார். அப்பொழுது அங்கு வந்த செல்போன் டவர் பராமரிப்பாளர் பார்க்கும்போது மர்ம நபர் ஒருவர் பேட்டரி திருடியது தெரிய வந்தது. 

 

அது தொடர்ந்து அவரை பிடிக்க சென்றபோது அவர் தப்பி சாலையில் ஓடி உள்ளார். அப்போது அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அவர் காரைக்கால் அடுத்த தலதெரு பகுதியைச் சேர்ந்த குமார் என்றும் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் செல்போன் டவர் பராமரிப்பு பணியில் இருந்ததாகவும் தெரியவந்தது. அதை தொடர்ந்து திருடிய பேட்டரி பறிமுதல் செய்து அவர் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.