விவசாயிகளின் கண்ணீரை துடைக்க அன்புமணி ராமதாஸ் குரல்! நெல்லுக்கு ₹3500 வழங்க வலியுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள 3500 நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருவதாக அன்புமணி குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் : விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு குவின்டால் நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும்;ஒரு குவின்டால் நெல்லை 3500 கொடுத்து தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 120 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படும் நிலையில் வெறும் 48 லட்சம் டன் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது மீதம் 72 லட்சம் டன் தனியாரிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் சூழல் உள்ளது, தமிழகத்தில் உள்ள 3500 நெல் கொள்முதல் நிலையங்கள் உரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருவதாக அன்புமணி குற்றச்சாட்டு.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டத்திற்குட்பட்ட குறிச்சி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளிடம் பேசியதாவது:-
திமுக அரசுக்கு விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் விவசாயிகளிடம் வாங்கும் நெல்லுக்கு உரிய ஊக்கத் தொகையை கொடுத்து இருக்க வேண்டும்.
ஒரு குவின்டால் நெல்லுக்கு மத்திய அரசு 2369 ரூபாய் கொடுக்கிறது ஆனால் தமிழக அரசு ஊக்கத்தொகையாக வெறும் 131 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான ஒரிசாவில் விவசாயிகளுக்கு ஒரு குவின்டால் நெல்லுக்கு 800 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. மாநில அரசு மத்திய அரசுக்கு ஏஜென்ட் ஆக செயல்படுகிறது அதாவது மத்திய அரசுக்கு தேவைப்படும் நெல்லை மாநில அரசு எங்குள்ள விவசாயிகளிடமிருந்து வாங்கி மத்திய அரசாங்கத்திற்கு கொடுக்கிறது.
விவசாயிகளுக்கு போதுமான ஊக்கத்தொகையை கொடுக்காமல் நாங்கள் அவ்வளவு கொடுத்து விட்டோம் எவ்வளவு கொடுத்து விட்டோம் என்று சொல்லி வருகிறார்கள். ஒரு குவின்டால் நெல்லுக்கு தமிழக அரசு 2500 ரூபாய் ஊக்க தொகையாக கொடுப்பதாக பொய் சொல்லி வருகிறார்கள். தாங்கள் விளைவிக்கும் பொருளுக்கு விலையை நிர்ணயிக்கத் தெரியாத மக்களாக விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 48 லட்சம் டன் நெல்லை மட்டும்தான் அரசு கொள்முதல் செய்கிறது மீதம் இருக்கக்கூடிய 72 லட்சம் டன் நெல் தனியாரிடம் தான் கொடுக்கப்படுகிறது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலை கிடைக்கும் ஆனால் தனியாரிடம் அது போன்று கிடைக்காது தனியார் சொல்வது தான் விலை எதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் இதற்கு அரசாங்கம் 80 லட்சம் டன்னாக வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் 3500 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது அதில் சுமார் 2500 நெல் கொள்முதல் நிலையங்கள் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே உள்ளது மீதம் இருக்கக்கூடிய ஆயிரம் மற்ற மாவட்டங்களில் உள்ளது. விவசாயிகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த நெல்லை விலை வித்து கொண்டு வருகிறார்கள் ஆனால் இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாக்க எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த அளவுக்கு தான் தமிழக அரசின் நடவடிக்கைகள் இருக்கிறது.
விவசாயிகள் திமுகவை நம்பாதீர்கள் இதுவரை செய்து கொடுக்காதவர்கள் இனிமேலும் செய்து கொடுக்க மாட்டார்கள். இது தவிர நெல் அரவை இடங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றிலும் இதுபோன்று ஏராளமான பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் எங்களிடம் தீர்வு இருக்கிறது.
விவசாயிகளுக்கு மதிப்பு கொடுங்கள் அவர்களது பொருட்களுக்கு உரிய விலையை கொடுங்கள் ஒரு குயின்டால் நெல்லுக்கு 3500 கொடுத்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். நெல் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும். சேமிப்பு கிடங்குகளை அதிகமாக வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் திமுக தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்திருக்கிறது எங்கள் தந்தை நான்கு முறை முதலமைச்சர் என்று பெருமை பேசுவதனால் என்ன ஆகப்போகிறது.
விவசாயிகளுக்கு பாசன வசதி பெரும் வகையில் நீர்நிலைகளை தூர்வார பட வேண்டும்.





















