மேலும் அறிய

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் 5 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 42 வது வார்டு செங்கலாச்சியம்மன் கோயில் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

தஞ்சாவூர்: மக்களுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று தனது ஓய்வில்லா பிரச்சாரத்தில் உறுதியளித்து பேசி வாக்குகள் சேகரித்தார் தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன். இவருக்கு பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 5 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 42 வது வார்டு செங்கலாச்சியம்மன் கோயில் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 43 வது வார்டு மருத்துவக் கல்லூரி பகுதியில் ஒவ்வொரு நகர், தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். 

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி

பின்னர் மாலை ஆற்றுப்பாலம் சட்டமன்றத் தேர்தல் பணிமனையிலிருந்து திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். 29,30,31 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர்  சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உயர்த்த உணவு பதப்படுத்தலுக்கான திறன் பயிற்சி வழங்கப்படும். உழவர் சந்தைகள்' வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிரிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும்.

மாநகராட்சி முழுவதும் முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதிகளை தெரிவித்து வாக்குகள் சேகரித்தார். மேலும் தமிழக அரசு செயல்படுத்தி மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற பெண்களின் சமூக நீதி மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சமாக விளங்கும் இந்த திட்டங்கள், பெண்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 

மக்களுக்கான பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்... திமுக தஞ்சை தொகுதி வேட்பாளர் உறுதிமொழி

அரசு பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு பெரும் உதவியாக உள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 4.95 லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இது பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்கிறது.

சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியை விட, தற்போதைய ஆட்சியில் மும்மடங்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,755.99 கோடி மதிப்பிலான பழைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, சுமார் 16 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தாய்-சேய் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. இதுபோன்று பல்வேறு சிறப்பு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது என்று கூறி வாக்குகள் சேகரித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்கள் ஆதரவு அலை எழுந்தாச்சு... வெற்றிக் கொடி ஏறும் நாள் அருகில் வந்தாச்சு: திமுக வேட்பாளரின் சுழற்றி அடிக்கும் பிரசாரம்
மக்கள் ஆதரவு அலை எழுந்தாச்சு... வெற்றிக் கொடி ஏறும் நாள் அருகில் வந்தாச்சு: திமுக வேட்பாளரின் சுழற்றி அடிக்கும் பிரசாரம்
அ.தி.மு.க. கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும்: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
அ.தி.மு.க. கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும்: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
“சித்திரை விழா சிறப்பு: தஞ்சை கிராமங்களில் ‘நல்லேர் பூட்டும்’ மரபு விழா”
“சித்திரை விழா சிறப்பு: தஞ்சை கிராமங்களில் ‘நல்லேர் பூட்டும்’ மரபு விழா”
தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் திருவிழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா
தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் திருவிழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Samrat Choudhary: எடுத்த சபதம் முடித்த பீகார் புதிய முதலமைச்சர்.. யார் இந்த சாம்ராட் சௌத்ரி?
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
Embed widget