மேலும் அறிய

கும்பகோணத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவம்: ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பரவசம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரதான கோயிலாக ஆதிகும்பேஸ்வரர் கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு திருக்குடமாக்கு, குடந்தை என்ற பெயர்கள் உள்ளதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கோயில்கள் நிறைந்த நகராக விளங்கி வரும் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கோயில்களின் நகரமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரதான கோயிலாக ஆதிகும்பேஸ்வரர் கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு திருக்குடமாக்கு, குடந்தை என்ற பெயர்கள் உள்ளதாக தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1600 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் 128 அடி உயரம் கொண்டது. கோயிலின் மூலவரான ஆதி கும்பேஸ்வரர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் என்று ஸ்தல வரலாறு கூறுகின்றது.

இந்த சுயம்பு லிங்கத்திற்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடக்கிறது. காசி, ராமேஸ்வரம், சிதம்பரம் வரிசையில் இந்த கோயில் 11-வது சிவதலமாக விளங்குகின்றது. கோவிலில் வீற்றிருக்கும் மங்களாம்பிகை மந்திரங்களுக்கு எல்லாம் அதிபதியாக விளங்குவதால் அம்மனுக்கு மந்திரபீடேஸ்வரி என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலில் வெளிப்பிரகார கிழக்கு மூலையில் அகத்தியருக்கு என்று தனி சன்னதி அமைய பெற்றுள்ளது.

சைவ சமயத்தை வளர்த்த அறுபத்து நான்கு நாயன்மார்களுக்கும் கோவிலில் சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் மாசி மக விழா, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகவிழா, மகாமக குளத்தில் நடக்கும் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் ஆகியவை பிரசித்தி பெற்ற விழாக்கள் ஆகும். 

இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆதிகும்பேஸ்வரர் கோயில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்பின்னர் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2023 ஆண்டு பாலாலயம் நடந்தது. குடமுழுக்கு பணிகள் நடந்ததால் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு இல்லாமல் அனைத்து நிகழ்வுகளும் நடந்தது. கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டிருந்ததால் மாசிமக விழா, பங்குனி உத்திரவிழா தெப்ப உற்சவம் உள்ளிட்ட விழாக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடக்காமல் இருந்தது. 

இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி இக்கோயில் குடமுழுக்கு விழா மிகவும் சிறப்பாக நடந்தது. அதன்பின்னர் அனைத்து முக்கிய விழாக்களும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து அம்பாள் புறப்பாடு நடந்தது. புறப்பாட்டின் போது கோயில் யானை மங்களம் முன் செல்ல சுவாமி மகாமக குளத்தில் கீழ் கரை பகுதியில் தயாரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தொடா்ந்து காலை 10.20 மணிக்கு  அலைமகளும், கலைமகளும் கவரி வீச மலைமகளாகிய மங்களாம்பிகை தெப்பத்தில் ஒரு சுற்று உலா வந்தார். தொடர்ந்து மாலை மகாமக குளத்தில் 2 சுற்றுகள் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 3 ஆண்டுகளுக்கு பின்னர் தெப்பத்தில் சுவாமி உலா வந்ததை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர்கள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் நினைவில் வைத்திருப்பர்... முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
2ம் நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை... தஞ்சை, திருச்சியில் பரபரப்பு
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
தமிழகத்தில்  ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
200 தொகுதிகளையும் தாண்டி வெல்வோம்... தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
200 தொகுதிகளையும் தாண்டி வெல்வோம்... தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
“அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர்.. பின்னணியில் சதி.. பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
TVK Vijay: தவெக பரப்புரை ரத்து.. சோர்ந்து போன விஜய்.. உடல்நிலை பற்றி பரவும் தகவல்!
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
தமிழ்நாடு உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமனம் ஏன்.? பரபரப்பு தகவல்கள்...
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
ஆட்டோ ஓட்டி, துணி துவைத்து, சைக்கிள் ஓட்டி...பிரச்சாரத்துல இன்னும் என்னலாம் பண்ணுவீங்க?
Zelensky Vs America: இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
இனி அமெரிக்காவ நம்பி யூஸ் இல்ல.! நேட்டோவை தூண்டிவிடும் ஜெலன்ஸ்கி; சொல்வது நடக்குமா.?
Toyota Innova Hycross: 2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
2 லட்சம் கார்கள் விற்பனை; பட்டையை கிளப்பும் இன்னோவா ஹைக்ராஸ்; வாங்குபவர்களை கவர்ந்தது எப்படி.?
Car Tips: பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
பந்தாவுக்காக உங்க கார்ல பெரிய டயர்கள மாட்டியிருக்கீங்களா.? அதனால எவ்வளவு ஆபத்து தெரியுமா.?
Embed widget