புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்னும் ஒரே நாள்தான் இருக்கு. இன்றே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க மொத்தம் 129 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை 31.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். செவிலியர் (Staff Nurse) காலியிடங்களின் எண்ணிக்கை: 114 கல்வித் தகுதி: B.Sc (Nursing)/ DGNM படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 நகர சுகாதார செவிலியர் (UHN / ANM) காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ANM Course படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 14,000 மருந்தாளுநர் (Pharmacist) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B. Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 ஆய்வக நுட்புனர் (Lab Technician) காலியிடங்களின் எண்ணிக்கை: 7 கல்வித் தகுதி: C.M.L.T, படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 13,000 மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/ Support staff) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 8,500 இடைநிலை சுகாதாரப் பணியாளர் (MLHP) காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: B.Sc., (Nursing) / DGNM படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2025/07/17531766246360.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622001 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025. இன்னும் ஒரே நாள்தான் இருக்கு. அதனால விண்ணப்பிக்காதவங்க உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு சமூகப் பணியாளர் பணியிடத்திற்காக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதிதான் கடைசி நாள். எனவே சீக்கிரம் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. கடலூர் மாவட்ட சமூக நலத்துறையில்தான் இந்த வேலை வாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க. தேர்வு முறை பற்றி விளக்கமாக உங்களுக்கு!!! கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சமூகப் பணியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். சமூகப் பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: சமூகப் பணி, ஆலோசனை, மனநலம், குழந்தைகள் அல்லது பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம். சம்பளம்: ரூ. 18,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2025/07/17531037225392.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் - 607001 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
சுகாதாரத்துறையில் 129 பணியிடங்கள்... விண்ணப்பிக்க இன்னும் ஒரே நாள்தான் இருக்கு
என்.நாகராஜன் | 30 Jul 2025 03:24 PM (IST)
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் 129 பணியிடங்கள்.
வேலை வாய்ப்பு அறிவிப்பு