Tamilnadu Election updates : வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்.. ட்ரெண்டாகும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு
கொரோனா பாதிப்பு உள்ளதால் வாக்காளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ; மக்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்
ABP NADU Last Updated: 06 Apr 2021 07:50 AM
Background
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நடிகர் அஜித், கமல், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதுவரை...More
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதோடு சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நடிகர் அஜித், கமல், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். இதுவரை 13 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
தமிழகத்தில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக பாலக்கேட்டில் 87.33 சதவீதம் பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், தமிழகம் முழுவதும் பதிவான வாக்குப்பதிவு முழு விபரம் சற்று முன் கிடைத்துள்ளது. அதன் படி 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலகோட்டில் தொகுதியில் 87.33 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இத்தகவலை தெரிவித்துள்ளார்