ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக, தூத்துக்குடி வ. உ.சி. காய்கறி சந்தையில்   செயல்பட்டு வரும் கடைகளை எந்தவித விதிமுறைகளும் பின்பற்றாமல், மாற்று ஏற்பாடு செய்யாமல் வெளியேற்றுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி வ.உ.சி . காய்கறி மார்கெட்  வியாபாரிகள் சங்கத்தின்  வேலுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


 


இந்த வழக்கு நீதிபதிகள் T.S. சிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஸ்மார்ட்சிட்டி  திட்டத்திற்காக, தூத்துக்குடி வ. உ.சி. காய்கறி சந்தையில் செயல்பட்டு வரும் கடைகளை வருகிற மே மாதம் 7ஆம் தேதிக்குள் காலி செய்யவும், தூத்துக்குடி மாநகராட்சி, மாற்று கடைக்கு  ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.