TN Corona LIVE Updates: கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 21 May 2021 09:05 PM

Background

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று...More

கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை எட்டு மாநிலங்களில் மட்டுமே அதிகளவில் உள்ளதாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த எட்டு மாநிலங்களில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் அந்த மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.