Toxic Madhan | 'பப்ஜி போதும் நிறுத்துங்க.. நல்லா படிங்க' - மதன் யூ டியூப் பக்கத்தில் அட்வைஸ் செய்த போலீசார்..!

Toxic Madhan 18+ யூ டியூப் பக்கத்தின் முன்னுரையில் பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள் என சைபர் போலீசார் பதிவிட்டுள்ளனர்

Continues below advertisement

பெண்களை இழிவுபடுத்தியது, ஆபாச வார்த்தைகளால் மிரட்டியது என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்த நிலையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மதன் என்கிற மதன் குமார் மாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு வலை வீசிய நிலையில் திடீரென தலைமறைவானார். சேலத்தில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி கிருத்திகா, மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மின் என்பது தெரியவந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். தீவிரமாக தேடப்பட்ட நிலையில் தருமபுரி அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த மதனை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் சென்னை கொண்டு வரப்பட்ட மதன் விசாரணைக்குப் பின் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதனை ஜூலை 3-ந் தேதி வரை பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. 

Continues below advertisement


இதற்கிடையே மதனின் யூ டியூப் பக்கத்தை முடக்கும் வேலையில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டனர். இது தொடர்பாக யூடியூப் நிறுவனத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மதனின் 5 யூ டியூப் சேனல்களை முடக்கியது சைபர் க்ரைம். அதில் ஒன்றான Toxic Madhan 18+ யூ டியூப் பக்கத்தின் முன்னுரையில் பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். நன்றாக படியுங்கள் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளார்.

முன்னதாக அவரது லேப்டாப், மெமரி கார்டு, இரு சொகுசு கார்கள் மற்றும் 4 கோடி ரூபாய் பணம் இருந்த கிருத்திகாவின் வங்கி கணக்கு ஆகியவை போலீசாரால் முடக்கப்பட்டது. மதனின் வீடியோக்களை அவரது நண்பர்கள் சிலரும் , தங்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பற்றிய விபரமும், மதனின் யூடியூப் சேனலில்  பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் யார் என்கிற விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.


யூடியூப் மூலமாக சம்பாதித்த பணத்திற்கு மதன் முறையான வருமான வரி செலுத்தவில்லை. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பில் மதன் ஈடுபட்டதும், பணம் முழுவதையும் முதலீடுகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை அவர் சம்பாதித்த தொகை எவ்வளவு, அதற்கு செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பப்ஜி விளையாட வரும் பல பேரிடம் மதன் பணம் பெற்றுள்ளார். மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் காவல் துறையில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களின் தனியுரிமை காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கோரைப்புல் தீயில் எரிந்து சாம்பல்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola