உலக பாரம்பரிய வாரம் இன்று துவங்கும் நிலையில், மாமல்லபுரம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க, சுற்றுலா பயணியருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. உலகின் மரபுச் சின்னங்களை பாதுகாக்கவும், வரலாற்றை இளம் தலைமுறையினர் அறியவும், ஆண்டு தோறும் ஏபரல்  18ல் உலக பாரம்பரிய தினமாகவும், நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை உலக பாரம்பரிய வாரமாகவும் கடைப் பிடிக்கப்படுகிறது.


மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை, சாளுவன்குப்பம் புலிக்குகை, சித்தன்னவாசல், மதுரை திருமலைநாயக்கர் மஹால் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களைப் பார்க்க, இன்று ஒரு நாள் இலவச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், கோட்டைகள், அரண்மனைகள் உள்ளிட்டவற்றை, அனைவரும் இன்று இலவசமாக பார்வையிடலாம்.


மாவட்ட தொல்லியல் அறிஞர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, மாவட்டத்தின் வரலாற்று சின்னங்களின் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த உள்ளனர். மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டாரம் சார்பில், மாமல்லபுரம் கடற்கரை கோவிலில், இன்று மாலை, புகைப்பட கண்காட்சி துவங்குகிறது. செஞ்சி கோட்டை, தாராசுரம் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண