(Source: Poll of Polls)
உறவினரை மணந்து ஒரு வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் - நடந்தது என்ன?
திருமணம் செய்து கொண்ட பெண், ஒரு வாரத்துக்கு பின் வீட்டில் இருந்து வெளியேறி, அவரது காதலனை திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு தஞ்சம்.

சேலம்: ஏற்காடு அருகே உறவினரை திருமணம் செய்து கொண்ட பெண், ஒரு வாரத்துக்கு பின் வீட்டில் இருந்து வெளியேறி, அவரது காதலனை திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
உறவினரை மணந்து ஒரு வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்
திருப்பத்துார், வக்கனம்பட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 21. இளங்கலை கணினியில் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு கடந்த ஜூன் 8ல், உறவினர் சூர்யா என்பவருடன் இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால் நேற்று பிரியதர்ஷினியும், சேலம் மாவட்டம் ஏற்காடு, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, தனியார் தங்கும் விடுதியில் பணிபுரியும் சந்தோஷ், 22, என்பவரும், திருமணம் செய்து கொண்டதாக கூறி, குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு, ஏற்காடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பிரியதர்ஷினி, சந்தோஷ், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். பிரியதர்ஷினி குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி, அவருக்கு சூர்யாவுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த திருமணம் பிடிக்காததால், காதலனுடன், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். விசாரணைக்கு, பெண்ணின் பெற்றோரை அழைத்ததற்கு வரவில்லை. CSR பதிவு செய்து அனுப்பிவைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காதல் ஜோடி தஞ்சம்
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, புத்துார் காலனியை சேர்ந்தவர் ஜெயசூர்யா, 26. ஏற்காடு டேங்க் புதுாரை சேர்ந்தவர் ஸ்ரீஜா, 19. இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொண்டு, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். அதேபோல் ஏற்-காடு, மைலப்பட்டியை சேர்ந்தவர் பிரியங்கா, 21, ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்த நிஷாந்த், 24, ஆகியோர், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இதுதொடர்பாக, இரு ஜோடிகளின் பெற்றோரை அழைத்து, போலீசார் விசாரித்து அனுப்பிவைத்தனர்.





















