எப்பேற்பட்ட குற்றவாளியாக இருந்தாலும், விரைவில் கண்டுபிடித்து விடும் நம் நாட்டு போலீசார், நித்தியானந்தாவை மட்டும் இன்னும் பிடிக்காமல் இருப்பது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்நாட்டை என்னதான் திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் மனதில் ஆன்மிகமே அதிகம் குடிக்கொண்டுள்ளது.


ஆன்மிகத்தில் லயித்துப்போன, தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி பலரையும் தனது பக்தர்களாக ஆக்கியவர். 10 வருடங்களுக்கு  முன்பு நித்தியானந்தாவின் ஆன்மிக பேச்சுகள், பேட்டிகள் இடம்பெறாத தொலைக்காட்சிகளே இல்லை, பிரபலங்களும் சிலர் இவருடன் இருந்ததையும் கண்டிருக்கலாம். இப்படி டாப் கியாரில் சென்றுக்கொண்டிருந்த நித்தியானந்தா பிரபல நடிகையுடன் இருந்த வீடியோ ஒன்று வெளியாகி, சமூகவலைதளங்கள் அதிகம் உபயோகம் இல்லாத அப்போதே வைரல் ஹிட்டடித்தது அந்த வீடியோ. முதலில் அந்த வீடியோவில் இடம்பெற்ற நடிகையின் முகம் மறைக்கப்பட்ட நிலையில், பின்னர், அது பிரபல நடிகை என்று தெரியவந்து பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.




நித்தியானந்தாவை தனது ஆன்மிக குருவாக எண்ணிய பலருக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரின் ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, இதனைத் தொடர்ந்து, நித்தியானந்தா மீது  புகார், பாலியல் வழக்கு என செய்திகள் வெளியாகி வந்தன. அதன்பிறகு நித்தியானந்தா தமிழ்நாட்டை காலிசெய்துவிட்டு, குஜராத்தில் ஆசிரமத்தில் எப்பவும் போல வசதியாக வாழ்ந்து வந்தார். நித்தியானந்தா மீது பல புகார்கள், வழக்குகள் இருந்தாலும் சில சிஷ்யர்கள், பக்தர்கள் நித்தியானந்தா மீதுள்ள பக்தியின் காரணமாக அவரை வணங்கி வந்தனர். 


இந்த நிலையில், குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆசிரமத்தில் இருந்த சிலர் வாக்குமூலம் கொடுத்த பிறகு நித்தியானந்தா மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதவி செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டே எஸ்கேப் ஆனா, நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென்று ஒருநாள் சமூகவலைதளத்தில் வந்து தான் கைலாச என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையையும் கொடுத்தார். அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐநாவுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் தகவல்கள் எல்லாம் வெளியாகின.




மேலும், கைலாசா என்ற இணையதளத்தில் நாட்டின் கொடி, பாஸ்போர்ட் ஆகியவை எல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இணையதளம் மூலம் தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். அத்துடன் விதவிதமான கெட்டப்புகளுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.


சமீபத்தில், கைலாசாவில் கொரோனா இல்லை என்றும், சிவபெருமான் தங்களை காப்பதாகவும் நித்தியானந்தா ட்வீட் செய்த பதிவு ஒன்றும் வெளியானது. இது அவரின், பதிவா என்று உறுதியாக தெரியவில்லை. இப்படி எல்லாம் செய்துக் கொண்டிருக்கும் நித்தியானந்தா இப்போது எங்கே இருக்கிறார். என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், கைலாசா என்ற டுவிட்டர் பக்கத்தில், நித்தியானந்தா இருக்கும் வீடியோக்கள், அந்த வீடியோக்களில் சில சிஷ்யகள் பேசுவது போலவும் இடம்பெற்றுள்ளன.






 


முன்பு போல நித்தியானந்தாவின் வீடியோக்கள் தற்போது வெளியாவதில்லை. அவர் கைலாசாவில் தான் இருக்கிறாரா... அல்லது வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டாரா என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஒரு நாடு துவங்கி, அதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் அறிவித்த நித்தியானந்தா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏன் கைலாசா நாட்டு வீரர், வீராங்கணைகளை பங்கேற்கச் செய்யவில்லை என சிலர் கிண்டலடித்து வருகின்றனர். அடுத்த ஒலிம்பிக்கில் கட்டாயம் கைலாசா பங்கேற்கும் என அவரது சிஷ்யர் ஒருவர் தெரிவித்தாலும், அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.