மேலும் அறிய

Siddique IAS: கறார், கண்டிப்பு - யார் இந்த சித்திக்? நிதித்துறை செயலரானது எப்படி? இலவச திட்டங்கள், பணம் வருமா?

TN Finance Secretary Siddique IAS: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள, சித்திக் ஐ.ஏ.எஸ்., யார்? என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Finance Secretary Siddique IAS: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலராக சித்திக் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டது ஏன்? என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிதித்துறை செயலர் நியமனம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக , ஐ.ஏ,எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முன்னாள் தலைமை செயல் அதிகாரியான முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராகவும், மாநில திட்ட இயக்குனராக இருந்த ஸ்வர்னா சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைக்கான முதன்மைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வந்த எம்.ஏ.சித்திக் என்பவர் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகத்தையும் கையாள உள்ள, இந்த சித்திக் யார் என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. எனவே, அவர் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சித்திக் ஐ.ஏ.எஸ் நிதித்துறைக்கு ஏன்?

முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழு பல்வேறு திட்டங்களை வகுத்தாலும், அவற்றை செயல்படுத்துவது மற்றும் கடைக்கோடி மக்களும் பயனடைவது போன்ற முக்கியமான பணிகளை அதிகாரிகள் தான் செய்கின்றனர். எனவே துறை வாரியாக நியமிக்கப்படும் அதிகாரிகள் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பாக தவெகவின் தேர்தல் பரப்புரையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலுவான நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில் தான் மாநில அரசின் நிதித்துறை செயலராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்துடன், பொது நிதி, மக்கள் நலதிட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, உளட்கட்டமைப்பு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால்,  இவரது பெயரை முதலமைச்சர் அலுவலகம் டிக் செய்ததாக கூறப்படுகிறது.

யார் இந்த சித்திக் ஐ.ஏ.எஸ்?

மெட்ராஸ் ஐஐடியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள சித்திக், கடந்த 1995ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சில் தமிழ்நாடு கேடர் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.தமிழ்நாடு அரசில், 1997-1998 வரை விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். 1998ம் ஆண்டு நிதித்துறையில் அரசின் துணைச் செயலராகச் சேர்ந்தார். 1999 முதல் 2002ம் ஆண்டு வரை நிதித்துறையில் துணைச் செயலராக பணியாற்றியதோடு, மாநில அரசின் வரவு செலவுத் திட்ட அதிகாரியாகவும் செயல்பட்டார். 2002 முதல் 2004 வரை தர்மபுரி மாவட்டத்திலும், 2006 முதல் 2007 வரை சிவகங்கை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். 


Siddique IAS: கறார், கண்டிப்பு - யார் இந்த சித்திக்? நிதித்துறை செயலரானது எப்படி? இலவச திட்டங்கள், பணம் வருமா?

மத்திய, மாநில அரசு பணி அனுபவம்:

2004 முதல் 2006 வரை இரண்டு ஆண்டுகள் அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும், 2014 முதல் 2017 வரை மூன்று ஆண்டுகள் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும் பதவி வகித்தார். ஜூன் 2022ம் ஆண்டு தற்போது வகித்து வரும் சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, 2017 முதல் 2019 வரை நிதித் துறையின் முதன்மைச் செயலர் (செலவினம்), 2019 முதல் 2021 வரை வணிக வரிகள் ஆணையர், மற்றும் டிசம்பர் 2021 முதல் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகிய பதவிகளை வகித்தார். இதனிடையே மத்திய அரசிலும் சித்திக் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன்படி, 2008-2009 காலகட்டத்தில் செலவினத் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், 2009 முதல் 2014 வரை ஐந்து ஆண்டுகள் உள்துறை மற்றும் நிதி ஆகிய இரண்டு முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றினார்.

திறமையான அதிகாரி என புகழாரம்:

நேர்மையான, கறாரான, கண்டிப்பான மற்றும் மாநில நிதிநிலைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட அதிகாரியாக, சக ஊழியர்களால் சித்திக் அடையாளம் காணப்படுகிறார். அதேநேரம், பேட்மிண்டன் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக உள்ளார்.  2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் மற்றும் சுவிஸ் ஓபன் போட்டிகளில் இந்திய பேட்மிண்டன் அணியின் மூத்த அணி மேலாளராகப் பணியாற்றியுள்ளார். 2016-ஆம் ஆண்டில் பிரீமியர் பேட்மிண்டன் லீக்கின் நிர்வாகக் குழுவிலும் இருந்துள்ளார்.

விஜய் நம்பிக்கை..!

தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுமார் 10 லட்சம் ரூபாய் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளது. இதுபோக, மகளிருக்கு மாதம் ரூ.2,500, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை, ஆண்டிற்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் என ஏராளமான வாக்குறுதிகளை, தேர்தலின் போது முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இவை அரசுக்கு மிகப்பெரிய செலவினத்தை ஏற்படுத்தக் கூடும். அதற்கேற்றவாறு வருவாயை பெருக்கவும், நிதிநிலையை கையாளவும் அனுபவம் வாய்ந்த சித்திக்கின் பங்களிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பு நம்புகிறதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget