மேலும் அறிய

TVK Vijay's Karur Plan: விரைவில் கரூர் பயணம்.? நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு - தவெக தலைவர் விஜய்யின் பிளான் என்ன.?

கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா.?

செப்டம்பர் 27-ம் தேதி, கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விஜய் இன்னும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. தற்போது குறித்து நிர்வாகிகளிடம் விஜய் பேசியதாகவும், அப்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

கரூர் சம்பவம் - தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்துவரும் நடவடிக்கைகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கரூர் தவெக  மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் நகர செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் அவர்களின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தள்ளனர்.

இதேபோல், சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ஒரு சர்ச்சைப் பதிவிற்காக அவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எப்போது கரூர் செல்வார் விஜய்.?

கரூர் கோர விபத்து நடந்த நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டும் இன்னும் அங்கு செல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நிச்சயம் வருவேன் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் எப்போது கரூர் செல்வார் என்ற கேள்விகள் எழுந்தன.

நிர்வாகிகளுடன் ஆலோசித்த விஜய்

இப்படிப்பட்ட சூழலில், கரூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களிடம் விஜய் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசுவது குறித்து கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

நிர்வாகிகளுக்கு உத்தரவு

கரூரை சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்களிடம் பேசிய விஜய், பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

மேலும், தவெக குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் எழும் விமர்சனங்கள் எதற்குமே பதிலளிக்க வேண்டாம் என்று அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விஜய் விரைவில் கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம்,  4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
CMS 03 LVM 3 Rocket: இஸ்ரோ இதுவரை செய்யாத சம்பவம், 4410 கிலோ - நாளை விண்ணில் பாய்கிறது LVM 3 ராக்கெட்
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
Embed widget