Kutralam falls status : ’மச்சி குற்றாலத்திற்கு ஒரு டிரிப் போலாமா?’ ரயில்களில் இடம் கிடைக்குமா.? இதோ சூப்பர் அப்டேட் தகவல்கள்
Kutralam falls status : குற்றாலத்தில் தென்மேற்கு பருவக்காற்றோடு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்காசி மற்றும் நெல்லை செல்லும் ரயில்களில் இடம் உள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியாச்சு
ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என கோடை வெயிலுக்கு இதமாக குளு குளு இடங்களை தேடி சென்ற மக்கள் தற்போது குற்றாலத்தின் மீது பார்வை திரும்பியுள்ளது. அந்த வகையில் குற்றாலத்தில் சீசன் எப்போது தொடங்கும் என காத்திருந்த மக்களுக்கு குஷியான தகவல் வந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த குற்றால அருவியானது இயற்கையின் சொர்க்கமாக அழைக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இயற்கை அருவியாகும் இந்த குற்றால அருவி. அந்த வகையில் குற்றாலத்தை சுற்றி மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகா தேவி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் உள்ளது.இந்த அருவிகளில் குளிப்பதோடு மட்டுமில்லாமல் தென்காசி மாவட்டம் முழுவதும் வீசும் தென்மேற்கு பருவக்காற்று மனதை கொள்ளை கொள்ளும்.
குற்றாலத்தில் குவியும் மக்கள்
அடுத்தாக குற்றாலத்தில் சாரல் மழையும் மனங்களை மகிழ்விக்கும். இதற்காகவே பல லட்சம் மக்கள் குற்றாலத்தை தேடி ஓடுவார்கள். அந்த வகையில் தென்மேற்கு பருவமழை சீசனான ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிவார்கள். தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் ஒன்றாக இருப்பது மெயின் அருவி இந்த அருவியில் குளிப்பதையே அதிகமான மக்கள் விரும்புவார்கள். தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஆனால் மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக மெயின் அருவி மூடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது ஒரு சில வாரத்திலோ மெயின் அருவி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.
குற்றால அருவிகளில் நிலை என்ன.?
அடுத்ததாக குற்றால பழைய அருவியில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் இந்த அருவியில் குவிந்து வருகிறார்கள். அடுத்தாக சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் அருவிகளில் ஒன்று ஐந்தருவி, இங்கு அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து மகிழ்கிறார்கள். இதே போல புலி அருவி, சிற்றருவியிலும் தண்ணீர் வரத்து நன்றாக இருப்பதால் பொதுமக்கள் குளிக்க அதிகளவு குவிந்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் குற்றாலத்தை ஒட்டியுள்ள கேரளா எல்லையில் உள்ள அச்சன் கோவில், கும்பாவுருட்டி அருவியிலும், ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் மக்கள் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
குற்றாலம் செல்ல ரயில்களில் இடம் உள்ளதா.?
இந்த நிலையில் குற்றாலத்திற்கு எப்படி செல்லலாம்.? ரயில்களில் இடங்கள் காலியாக உள்ளதா.? என்பது தொடர்பான தகவல்களை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் சென்னையில் இருந்து தென்காசிக்கும், அல்லது நெல்லைக்கு சென்றும் குற்றாலத்திற்கு செல்லாம். இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயிலில் ஜூன் 8ஆம் தேதி RAC 94 இடங்களும், 9ஆம் தேதி RAC 4, 10 ஆம் தேதி RAC 10ம் உள்ளது. 11 ஆம் தேதி RAC 101-ம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெயிட்டிங் லிஸ்ட் 50ம் உள்ளது. இதே போல அடுத்த வாரமும் RAC மட்டுமே உள்ளது.
பொதிகை ரயிலில் இடம் உள்ளதா.?
அடுத்தாக சென்னை எழும்பூர்- பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், அடுத்த 3 வாரங்களுக்கு அனைத்து இரண்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்புகள் நிரம்பிவிட்டது. இருந்த போதும் தென்காசிக்கு செல்லாமல், சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சென்று அங்கிருந்து செல்லும் வாய்ப்பும் உள்ளது. அந்த வகையில் எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செல்லும் குருவாயூர் ரயிலில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளது.
அதே நேரம் தாம்பரம் நெல்லை ரயிலில் ஜூன் 15 ஆம் தேதி 278 காலியிடங்கள் உள்ளது. எழும்பூர்- நெல்லை வந்தே பாரத் ரயிலிலும் டிக்கெட்கள் காலியாக உள்ளது. எனவே இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் டிக்கெட் விலை மட்டும் ஒருவருக்கு 1,635 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
நெல்லை ரயிலில் இடம் இருக்கா.?
மற்ற ரயில்களான ஆனந்தபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் டிக்கெட்கள் அனைத்தும் நிரம்பியுள்ளது. எனவே குற்றால சீசனையொட்டி தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே சிறப்பு ரயில் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெற்கு ரயில்வே வட்டார தகவல்களாக உள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















