Continues below advertisement

இறுதி கட்டத்தில் வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் இறுதி வரை நீடிக்கும், ஒரு சில வருடங்கள் ஜனவரி மத்தியிலும் மழையின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்தாண்டு தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்திருந்தாலும், அடுத்தடுத்து புயல், அதீத கன மழையானது பெய்யவில்லை. இதன் காரணமாக சென்னையில் எப்போதும் டிசம்பர் மாதம் ஏற்படும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை தப்பித்து கொண்டனர். இந்தநிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக டெல்டா வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யக்கூடிய மழைப்பொழிவை புள்ளியல் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை என கணக்கிடப்படும். அவ்வாறு பார்க்கும் போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று டிசம்பர் 31 வரை தமிழ்நாட்டில் மாநிலத்தின் சாராசரி 44 செ.மீ மழை பதிவாக வேண்டும். இந்தாண்டு 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட குறைவு என்றாலும் இயல்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

எந்த எந்த மாவட்டங்களில் மழை

மேலும் மாவட்ட வாரியாக பார்க்கும்போது திருவள்ளூர், திருவாரூர், இராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இயல்பிற்கு குறைவான மழையும் பிற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பான அளவில் மழை பதிவாகியுள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக சென்னையை பொறுத்தவரை மாவட்ட சாராசரியாக 72 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு 80 செ.மீ இது 10% குறைவு என்றாலும் புள்ளியல் அடிப்படையில் இயல்பு என்றே எடுத்துக்கொள்ளப்படும். மேலும் நீர் இருப்பை பொறுத்தவரை சென்னை ஏரிகள், மேட்டூர் அணை, பவானிசாகர், அமராவதி, பெரியார், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர் அணை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளிலும் நீர் இருப்பு 85% முதல் 100% வரை இருப்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு ஏற்படாததற்கு காரணம் என்ன.?

இந்தாண்டு இயல்பிற்கு அதிக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் நவம் 15ம் தேதி வரை நிடித்த வலுவான Negative IOD மற்றும் சாதமற்ற கடல் சார்ந்த போக்கின் காரணமாக பருவமழை இயல்பான அளவில் முடிவடைந்திருக்கிறது, இயல்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் இந்தாண்டு இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் டிட்வா, சென்யார் போன்ற புயல்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தமிழநாட்டில் பாதிப்பு குறைந்ததாகவும் இதுவே மழை குறைவிற்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு மழை தொடரும்

இந்நிலையில் பருவமழை புள்ளியல் ரீதியாக முடிவடைந்திருந்தாலும் முழுமையாக விலகவில்லை. கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, கடலூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் உள்பட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பதிவாககூடும். இதன் காரணமாக ஜனவர் 2 மற்றும் 3 தேதிகளில் குற்றாலம், திற்பரப்பு உள்ளிட்ட அருவிகளில் நீர் பெருக்கு எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.