சரி கீரிப்பிள்ளை எதிரில் வந்தாலோ அல்லது நம்மை கடந்து சென்றாலோ என்ன பலன்கள் என்பதை பற்றி பார்ப்போம்...
கீரிப்பிள்ளை உங்களிடத்திலோ அல்லது உங்கள் உடைமைகளின் இடத்திலோ வந்து உங்களைத் தொட முயற்சி செய்தால் அந்த குபேரனே உங்களிடத்தில் வந்து வாசம் செய்யப் போகிறார் என்றும்... பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சில காரியங்கள் உங்களுடன் தொடர்பு பெற போகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்...
கீரிப்பிள்ளை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக செல்லும் பொழுது சற்று மன சஞ்சலம் ஏற்படும் என்றும் நடக்கின்ற காரியங்கள் தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது... அதேபோல கீரிப்பிள்ளை இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக செல்லும் சமயத்தில் ஐஸ்வர்ய சம்பத்து உண்டாகும் என்றும் உங்களுக்கு அதிகப்படியான பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது...
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் திதியின் தோல் கடினமாக இருந்து பிரச்சனைகளில் இருந்து தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்கிறது அதேபோல நீங்களும் உங்களை எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் கொள்ளலாம்
பரிகாரம் என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்துள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்க கூடிய குபேரன் கோவிலுக்கு செல்லுங்கள்... அங்கே உங்களுக்கான தீர்வு காத்திருக்கிறது.... கீரி உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வாதம் செய்து விட்டு சென்ற அதே சமயத்தில் குபேர பகவானிடம் சென்று நீங்கள் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அந்த பகவானே உங்களுக்கு அருள் புரிவதாக எடுத்துக் கொள்ளலாம்... சம்பத்து குறையும் சமயத்தில் நீங்கள் நேராக காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய குபேரலிங்க கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையில் வளமும் சிறப்பும் பெற்று வாழ்வாங்கு வாழ பகவான் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்... கீரியின் அம்சமாக மற்றொன்றை பார்த்தால் நாக தோஷம் உங்களுக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவை விலகும் என்பது கூட ஒரு உண்மை.. காரணம் முன்னோர்கள் உங்களுக்கு எவ்வளவு கடுமையான தோஷங்களை ஏற்படுத்தி விட்டு மறைந்தாலும் கூட அவை ராகு கேதுவாக அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... இப்படி நாகதோஷத்தையே மட்டுப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதற்கு மிகப்பெரிய ஆயுதமாக செயல்படுவது கீரிதான்... கீரிப்பிள்ளைக்கு தான் பாம்பின் விஷத்தை முறியடிக்க கூடிய சக்தி உடலிலேயே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது... ஆகையால் தான் பாம்புக்கும் கீரிக்கும் ஆகாது.. கீரையை பார்த்தால் பாம்பு தலை விரிக்க ஓடிவிடும் என்று கூறுவது உண்டு...
ஒரு பாம்பு கீரையை 10 முறை கொத்தினாலும் கூட அந்த விஷம் கீரியின் உடலில் அவ்வளவு எளிதாக ஏறி விடாது காரணம் கீரியின் தோல் அவ்வளவு கடினமாக இருக்கும்... நீங்கள் யூடுபில் பாம்பு கீரி சண்டை என்று போட்டுப் பார்த்தால் கீரிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பதை உங்களால் பார்க்க முடியும்... எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சுலபமாக கீரிக்குள் ஏற்றி விட முடியாது என்ற காரணத்தால் பாம்பினால் கீறியை ஒன்றும் செய்து விட முடியாது... இப்படியாக நாக தோஷம் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய சர்பதோஷம் போன்றவற்றை கீரியின் அம்சம் மிகப்பெரிய சக்தியாக இருந்து உங்களை பாதுகாக்கும்....