Anbumani Vijay Meet : கோட்டைக்கு நேரில் சென்ற அன்புமணி.! சிஎம் விஜய்யோடு திடீர் சந்திப்பு- பேசியது என்ன.?
Anbumani Vijay Meet : 69 சதவீத இட ஒதுக்கீட்டை காக்க தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு உடனே நடத்தப்பட வேண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வலியுறுத்தினார் அன்புமணி.

முதலமைச்சர் விஜய்யோடு அன்புமணி சந்திப்பு
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழநிலையில், இன்று காலை தலைமைச்செயலகத்திற்கு வந்த பாமக தலைவர் அன்புமணி முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் வேண்டும் என முதலமைச்சர் இடம் விளக்கமாக கூறினேன்.சுமார் 25 நிமிடங்கள் முதலமைச்சரிடம் இது பற்றி தெளிவாக விளக்கினேன். அவர் கவனமாக கேட்டுக் கொண்டார்.முதலமைச்சரின் பேச்சு நம்பிக்கை கொடுக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் அவர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். திமுக ஆளும்கட்சியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தற்போது ஆதரவு நிலைபாடு குறித்த தெரிவித்த கேள்விக்கு,ஸ்டாலின் அவர்களின் மனமாற்றத்தை நான் வரவேற்கிறேன் என்றார். தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ஒதுக்கீடு செய்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் இரண்டு மாதத்தில் இந்த கணக்கெடுப்பை முடித்துவிடலாம்.கர்நாடகாவில் இரண்டு லட்சம் அதிகாரிகள் துணையோடு 600 கோடி செலவு செய்து அந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள் அதன் மூலமாக பல்வேறு சமூகங்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியல் சமூக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தற்போது உள்ள இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்துக் கொடுக்கலாம் எனவும் அன்புமணி தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, நாளையுடன் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் நிறைவடைகிறது.நன்றாக செயல்படுகிறார்கள், ஊழல் பெறும் அளவில் குறைந்துள்ளது, பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் மாறி உள்ளனர். அதிகாரிகள் மாற நேரம் வேண்டும் என அன்புமணி கூறினார்.
தமிழகத்தில் ஊழல் குறைந்துள்ளது
திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே இருக்கும் மின் திட்டங்களை செயல்படுத்தவில்லை. புதிதாக மின் திட்டங்களை தொடங்கவில்லை. அரசு உற்பத்தி செய்யும் மின் ஆலைகளில் 3 ரூபாய் 50 காசு கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் பெற்றனர்.ஆனால் தனியார் மின் ஆலையில் 9 ரூபாய் கொடுத்து மின்சாரம் பெற்றுள்ளனர். தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதால் ஊழல் செய்ய முடியும் என்பதால் அரசு சார்பில் மின் உற்பத்தி செய்வதை கடந்த ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி கூறினார்.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















