தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 14-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15-ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும் இது  வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16-ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதன்காரணமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 2 இரண்டு மணி நேரத்திற்கு செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடுமெனவும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement