விழுப்புரம் : திமுக துரோகிகளை விலை கொடுத்து வாங்கி பி டீம், சி டீம் எல்லாம் உருவாகியுள்ளது. எதிரிகளுக்கு மட்டுமல்ல, துரோகிகளுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டும்: விழுப்புரத்தில் நடைபெற்ற வாக்காளர் தீவிர திருத்த பணி தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேச்சு.
துரோகிகளுக்கும் நாம் பாடம் கற்பிக்க வேண்டும்!
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் வாக்காளர் தீவிர திருத்த பணி தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:
திமுக சொல்வதை போல எஸ்.ஐ.ஆர் என்பது புதிதாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது கிடையாது. இது குறிப்பிட்ட கால இடைவேளையில் வாக்காளர் திருத்தம் மேற்கொள்வது சகஜம். ஆனால் தமிழ்நாட்டுக்கு அபாயம் வந்துவிட்டது போலவும், நாட்டிற்கு ஆபத்து ஆபத்து வந்துவிட்டது போலவும் திமுக பித்தலாட்ட வேலையை தொடங்கியுள்ளது. மக்களை திசை திருப்ப பார்க்கிறது. இந்த அரசின் தவறுகளையும், நிர்வாக தவறுகளையும், ஊழல்களையும் மறைப்பதற்காக மக்களின் உணர்ச்சிகளை தூண்டி பொய்யான கருத்துக்களை சொல்லி ஏமாற்ற பார்க்கிறது. கடைசியாக 2004ம் ஆண்டு வாக்காளர் திருத்த மேற்கொள்ளப்பட்டது.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் போலி வாக்காளர்கக் சேர்க்கப்படுகிறார்கள்
அப்போது திமுக அங்கம் வகித்த வாஜ்பாய் அரசுதான் திருத்தம் கொண்டு. அதிமுக இதை வரவேற்க காரணம், ஒவ்வொரு தேர்தலின் போதும் இறந்த வாக்காளர்களை நீக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கிறோம், ஆனால் எந்த தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இறந்தவர்களை, இடம் மாறியகர்களை, இரட்டை வாக்காளரை நீக்கியது கிடையாது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் போலி வாக்காளர்கக் சேர்க்கப்படுகிறார்கள். இதனை கண்டறிந்து கூறினாலும் நீக்குவது கிடையாது. திமுக நீதிமன்றம் செல்வதாக கூறியுள்ளது. நீதிமன்றம் தடை விதிக்கும் என யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவுக்கு நீதிமன்றம் தடை விதிக்காது. பீகார் தொடர்பாக பலர் உச்ச நீதிமன்றம் சென்றனர் ஆனால் ஆதார் அட்டையை சேர்க்க வேண்டும் என்று மட்டுமே நீதிமன்றம் கூறியது.
பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கண்டிப்பாக இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணி நடைபெறும். இதனை தேர்தல் ஆணையம் மாற்றாது. தேர்தல் ஆணையம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல 12 மாநிலங்களில் இந்த பணி நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல ஆளும் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலத்திலும் இந்த திருத்தணி மேற்கொள்ளப்படுகிறது.
இன்றைக்கு திமுக பி டீம், சி டீம் உருவாகியுள்ளது
திமுக அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும். நம்மை விட திமுகவுக்கு அதன் பலவீனம் தெரியும். இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என நம்மை விட ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். திமுக ஆட்சி, அதிகாரம், பணம் என அனைத்து அதிகாரங்களையும் பயண்டுத்தும். திமுக துரோகிகளை விலை கொடுத்து வாங்கி, இன்றைக்கு திமுக பி டீம், சி டீம் உருவாகியுள்ளது. அவர்கள் குறித்த பேச அவர்களுக்கு தகுதி இல்லை விட்டுவிடுவோம். துரோகிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.