அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அரவக்குறிச்சியில், 46 மி.மீ., மழை பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு 329 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 499 கன அடியாக அதிகரித்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 244 கன அடியில் இருந்து 250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 62.50 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை:
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 6,133 கனஅடியாக இருந்தது. நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 6,160 கன அடியாக சற்று அதிகரித்தது. கீழ் கட்டளை வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்து பாளையம் அணை:
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்:
கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,) கரூர், 1.6, அரவக்குறிச்சி, 46, அணைப்பாளையம், 18.6 ,க பரமத்தி, 3.8, கிருஷ்ணராயபுரம், 1.6, மாயனூர், 11, பஞ்சப்பட்டி, 39, கடவூர், 21, பாலவிடுதி, 25.2, மயிலம்பட்டி, 26 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக, 16.20மி. மீ., மழை பதிவானது.