Watch Video : தென்காசியில் காதல் திருமணம் செய்த பெண்ணை, அவரது பெற்றோர்கள் தரதரவென தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித் என்பவரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வரும்போதே ஒருவருக்கொருவர் காதலித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் -27ம் தேதியன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து அதை பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு குற்றாலம் காவல்துறையிடம் மனு அளித்து உள்ளனர்.
இருவரும் பயந்து ஓடி ஒளியும் காட்சி
இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். பொங்கல் அன்று கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார்கள் தகராரில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகவும் குற்றாலம் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தமிழக முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர்.
முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்ததால் புகார் குறித்து குற்றாலம் காவல்துறைக்கு அழுத்தம் வரவே கொடுத்த புகாரை திரும்பபெற மகன் வீட்டாரை காவல்துறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் மணமகள் வீட்டாரை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து கிருத்திகாவை அவரது கணவர் வினித் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் அவர்களின் காரை வழிமறித்து கிருத்திகாவின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் துரத்த ஆரம்பித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு இடத்தில் வினித் மற்றும் மனைவி கிருத்திகா இருவரும் ஓடி ஒளிந்துள்ளனர். அவர்களை துரத்திய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடியாட்களுடன் அங்கு வந்து வினித்தை அடித்து உதைத்தனர்.
உள்ளே புகுந்து வினித்தை அடிக்கும் காட்சி
மேலும் கிருத்திகாவின் சம்மதம்மின்றி அவரையும் அடித்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் தூக்கி சென்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மணமகன் வீட்டார் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது கிருத்திகாவின் தாய், தந்தை உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் முழுவதும் பதிவான நிலையில் அது தற்போது வெளியாகி உள்ளது.
அதில் இருவரும் ஓடி வந்து ஒளிவதும் கிருத்திகாவின் பெற்றோர் வினித்தை அடித்து மகளை இழுத்து சென்று காரில் ஏற்றுவதும் பதிவாகியுள்ளது. மேலும் இதனை அங்கிருந்தவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் போலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.