திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பகதர்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தை பிடிபட்டதாக வனதுறையினர் தெரிவித்துள்ளனர்.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய நெல்லூரைச் சேர்ந்த குடும்பத்தினர் அலிபிரி பகுதியில் பாத யாத்திரை சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர், அந்தச் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது.
வனத்துறையினர் நடவடிக்கை
திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்லும்போது பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினர் சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4-ஆவது சிறுத்தை சிக்கியது. இதுவரை நடைப்பாதையில் சுற்றித்திரிந்த 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட சிறுத்தை கூண்டில் ஆக்ரோஷமாக உறுமும் காட்சிகள் வெளியாகியுள்ளன.