]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!
மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
![]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு! virudhunagar government medical college medical laboratory technologist diploma tnn ]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/c91b9530a2651519a21fb9e8d1a8841b1781115078080184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate Pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/-ஊதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
(Under District Health Society) பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II)
மொத்த பணியிடங்கள்: 6
மாத ஊதியம்: ரூ.15000
வயது வரம்பு: குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)
கல்வித்தகுதி: மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT (இரண்டு ஆண்டுகள்) KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வி தகுதி/ சாதிச் சான்று/ஆதார் நகல்) தபால் மூலமாக அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 29.06.2026 பிற்பகல் 5.00 மணிவரை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, எண்:1, பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கூரைக்குண்டு கிராமம், விருதுநகர்-626 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















