விருதுநகர் மாவட்டம் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

Continues below advertisement

வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1901 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து மொத்தம் 1999 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதில் 88 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே உள்ள அமைவிடத்திலும், 10 வாக்குச்சாவடிகள் புதிய அமைவிடங்களிலும் உள்ளன. எனவே, இந்த கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தங்களுக்கான வாக்குச்சாவடி மையத்தை தெரிந்து கொள்ளவும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் “Know Your Booth” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement