Vinayagar Idol Immersion: விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கும் பக்தர்கள்..

சென்னையில் இன்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

நாடு முழுவதும் கடந்த 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எப்போதும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுவது வழக்கம். அந்த சிலைகள் விநாயகர் சதுர்த்தி முடிந்த மூன்று நாட்களுக்கு பிறகு கரைக்கப்படும். அந்தவகையில் சென்னையிலுள்ள விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்படுகின்றன. 

Continues below advertisement

 

இந்த சிலைகள்  இன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு,இதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் எடுத்து ஊர்வலமாக செல்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதை பின்பற்றி சரியாக விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

 

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து விநாயகர் சிலையை கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை முழுவதும் இன்று 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.  விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரை காவல்துறையினர் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்:

சென்னை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கட்டிடக்கலை நிபுணர் சீனிவாசன். விநாயகரின் தீவிர பக்தர் ஆன இவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைகளைக் கொண்ட கண்காட்சியை நடத்தி வருகிறார். தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் உள்ள மண்டபத்தில் இவரது கண்காட்சி  செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் அரை இன்ச்சில் இருந்து 8அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன் இரும்பு கண்ணாடி போன்றவற்றிலான அனைத்து வகை விநாயகர் சிலைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.


கண்காட்சியில் பல வகை விநாயகர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சொர்க்க வாசல் விநாயகர் கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்றும் ஸ்கூட்டர் சைக்கிள் கார் ரயில் ஓட்டும் விநாயகர் சிலைகளும் இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் வடிவத்தில் விநாயகர் சிலைகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

நர்த்தன கணபதி காசியானந்த கணபதி பல்வேறு உருவங்களில் உள்ள விநாயகர் சிலைகள் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன அவை அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சுமார் 20000 விநாயகர் சிலைகள் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள விநாயகர் கோயில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
 

மேலும் படிக்க: 
 
Continues below advertisement