சென்னையில் கணவர் - மனைவி கள்ளக் காதலனுடன் உல்லாசம்

விழுப்புரம் காணைகுப்பத்தைச் சேர்ந்த சுரேஷின் மனைவி சுதா, கடந்த 7 - ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நான்காவது குழந்தையாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் மருத்துவமனைக்கு தெரிவிக்காமல் அன்று இரவே குழந்தையுடன் வெளியேறியதால் மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.

Continues below advertisement

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறையினர் இணைந்து சுதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். தனது கணவர் சுரேஷ் சென்னையில் தங்கி வேலை செய்து வருவதாகவும், இந்த நேரத்தில் அதே ஊரை சேர்ந்த யோகலிங்கம் என்பவர் உடன் கள்ளக் காதல் ஏற்பட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.

ஏரியில் தூக்கி வீசப்பட்ட குழந்தை

தனக்கும் தனது கள்ளக் காதல் யோகலிங்கத்திற்கும் பிறந்த இந்த குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆரம்பத்தில் தனது கள்ளக் காதலன் யோகலிங்கத்துடன் குழந்தையை புதைத்ததாகவும், பின்னர் எரித்ததாகவும், சுடுகாட்டில் வீசியதாகவும், ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் சுதா முரண்பட்ட தகவல்களை தெரிவித்தார்.

Continues below advertisement

தொடர்ந்து நடத்தப்பட்ட காவல் துறையின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் என்பவருடன் சேர்ந்து, காணைகுப்பம் அருகே உள்ள அகரம் சித்தாமூர் ஏரியில் பிறந்த குழந்தையை வீசி கொலை செய்ததாக சுதா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கணவருக்கு தெரிந்தால் பிரச்சனை

தனது கள்ளக் காதலன் யோகலிங்கத்துடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பால் இந்த குழந்தை பிறந்ததாகவும் இது தனது கணவருக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்ற நோக்கில் குழந்தையை கள்ளக் காதலுடன் சேர்ந்து கொலை செய்ததை சுதா ஒப்புக் கொண்டார்.

இந்த தகவலின் அடிப்படையில், சுதா மற்றும் யோகலிங்கத்தை காவல் துறையினர் கைது செய்து, ஏரியில் குழந்தையின் உடலை தேடி எடுத்தனர், இது தொடர்பாக தீவிர விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் கொலை செய்தது உறுதியானது இதனை அடுத்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிறந்து 9 மணி நேரம் ஆகிய சிசுவை பெற்ற தாயே கள்ளக் காதனுடன் இணைந்து கொலை செய்த இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.