கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையம் ஊரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பண்ருட்டியை சேர்ந்த ஜெயசந்தியா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்து திருமணம் நாள் குறிக்கப்பட்டது அதன் பேரில், நேற்று முன்தினம்  காடாம்புலியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது, அப்பொழுது திருமணத்தில் டிஜே நிகழ்ச்சிக்கு பெண் விட்டார்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் பெண் அழைப்பு முடிந்து திருமண மண்டபத்தில் மணமகள் மற்றும் மணமகள் உறவினர்கள் சினிமா பாடலுக்கு வெகு நேரமாக டிஜே பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்து உள்ளனர்.

 


 

அப்பொழுது மணமகள் விட்டார்கள் மணமகன் மற்றும் மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மணமகன் மற்றும் மணப்பெண் பாடலுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தபோது உறவினர் ஒருவர் மணப்பெண் மேல் கை வைத்து நடனம் ஆடியதால் ஆத்திரமடைந்த மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். பின்னர் மணமகன் உடனடியாக மணப்பெண்ணிடம் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதனால் இரு குடும்பங்களிடையே மோதல் ஏற்பட்டு திருமண மண்டபத்தில் இருந்து மணமகள் வெளியேறியதாக கூறப்படுகிறது.

 


பின்னர் மணமகன் மனபெண்ணை அறைத்ததாக கூறி, உடனே மணப்பெணுக்கும் முறை மாமனுடன் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருமணம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து மணமகள் ஸ்ரீதர் பண்ருட்டி காவல் நிலையத்தில் நேற்று திருமணத்திற்கு முன்தினம் டிஜே நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்த மணமகளின் உறவினர்கள் தங்களை கட்டாயபடுத்தி ஆட செய்தனர், பின்னர் உறவினர்களில் ஒருவர் குடித்துவிட்டு மணப்பெண்ணு கழுத்தில் கையை வைத்துக் கொண்டு நடனமாடியது தனக்கு மிகவும் வருத்தம் அளித்தது, ஏன் இது போல் நடந்து கொள்கிறாய் என்று கேட்டதற்கு மனபெண்ணின் வீட்டார் இப்பொழுதே இவ்வாறு பேசுகிறாயா என கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு என்னை அடித்தனர், பின்னர் அடுத்தநாளே ஜெயசந்தியாவின் மாமாவிற்கு காட்டாய படுத்தி திருமணம் செய்துவிட்டதாகவும், தனக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனவும் புகார் ஒன்றை அளித்தார், அதனை தொடர்ந்து இன்று மணப்பெண் ஜெயசந்தியாவும் புகார் அளித்துள்ளார். 




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசந்தியா, என்னை யாரும் கட்டாயபடுத்தி திருமணம் செய்யவில்லை, எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருந்த ஶ்ரீதர் என்னிடமும் எனது குடும்பத்தார் இடமும் முன்பு இருந்தே வரதட்சணை கேட்டு வந்ததார், பின்னர் 50 சவரன் நகை போடுவதாக ஒப்புக்கொண்ட பிறகும் கல்யாண மண்டப்பத்திற்கு வந்தவுடன் மேலும் வரதட்சணையாக கார் வேண்டும் என கேட்டு என்னை மண்டபத்தில் வைத்து என்னை அடித்தார், இது மட்டும் இன்றி அவர் ஒரு குடிகாரர் மற்றும் ஒரு சைகோ போல் நடந்து கொள்வார், ஆகையால் தான் நான் திருமணத்தை நிறுத்தி எனது மாமாவை திருமணம் செய்ய கேட்டுக்கொண்டு திருமணம் செய்தேன். மேலும் எங்களது வீட்டார் சார்பில் இதுவரை 5 பவுன் நகை பொட்டுள்ளோம் ஆகையால் அவர் தான் எங்களுக்கு அவர் தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.