விழுப்புரம் : ஜானகிபுரத்திலுள்ள ஏரியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தனியார் நிறுனத்தினர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 12 அடி  ஆழத்திற்கு ஏரியில் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 




விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி வழியாக நாகை பட்டினம் வரை நான்கு வழி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மேம்பால பணிக்காக ஜானகிபுரம், ஆனாங்கூர் கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏரிகளில் உள்ள வண்டல் மண் 6 அடி ஆழத்திற்கு எடுத்து பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அருகிலுள்ள ஏரியில் தினந்தோறும் 50 க்கும் மேற்பட்ட  லாரிகள் மூலம் வண்டல் மண் எடுத்து சாலை அமைக்கும் பணியை தனியார் நிற்வனத்தினர் மேற்கொண்டுள்ளனர்.




இந்த நிலையில் அரசு  நிர்ணயித்த 6 அடி ஆழத்தினை விட 12 அடி ஆழத்திற்கு வண்டல் மண்னை சட்டவிரோதமாக எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக வண்டல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க சென்றால் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே,  மாவட்ட நிர்வாகத்தினர் அளவுக்கு அதிகமான வண்டல் மண் அள்ளப்படுவதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண