விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியிலுள்ள கைலாசநாதர் கோவிலில் கல்வெட்டு படிவங்களை பிரதி எடுக்கும்போது ராஜராஜன் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் சுரங்க அறை கண்டுபிடிக்கபட்டுள்ளன.
விழுப்புரம் நகர பகுதியான மந்தைக்கரை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு படிவங்களை பிரதி எடுக்கும் நிகழ்வு இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் வரலாற்று ஆய்வாளர் ரமேஷ் ஆகிய அங்கு வருகை புரிந்து பார்வையிட்டனர்.
இந்நிலையில் இன்று கல்வெட்டு படிவங்கள் எடுக்கும் கோது கைலாச நாதர் கோவிலின் கருவறையின் கீழ் அடித்தளமான ஜகதி என கூறப்படும் பகுதியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்ததும் அதனை பல்வேறு ஆண்டுகளுக்கு முன் கோவில் புணரமைப்பின்போது மண்ணால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஜகதி பகுதியை தோண்டி கல்வெட்டுக்களின் எழுத்துக்களை படிவங்களாக பிரதி எடுத்தனர். மேலும் அதே பகுதியில் சுரங்க அறை பயன்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோவில் ராஜ ராஜன் காலத்து கோவில் என்பதால் ஏற்கனவே மூன்று கல்வெட்டு படிவங்கள் பிரதி எடுத்த நிலையில் கோவிலில் முழுமையாக கல்வெட்டு படிவங்கள் பிரதி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள ஆதிவாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு இக்கோவில் மூலமாக தானமாக வழங்கப்பட்ட நிலபரப்பு குறித்து கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது :-
கைலாசநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ராஜராஜன் காலத்தில் தொடங்கி பாண்டியர்கள் பிறகு சம்புவராயர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் கல்வெட்டுகள் உள்ளது. குறிப்பாக கோயிலில் மூன்று கல்வெட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கோவிலினுடைய தெற்கு புறத்தில் ஒரு சுரங்க அறை உள்ளது, பின்னர் அதனை ஆய்வு செய்தபோது கல்வெட்டுகள் இருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. அந்த இடத்தில் மண் முடி இருந்தால் அப்பகுதியை அகற்றம் செய்து புதிய கல்வெட்டுகளை கண்டுபிடிக்கபட்டன. அதில் சம்புவராயர்களின் கல்வெட்டுகள் கிடைத்தது.
அதில் இந்த ஊர் ராஜராஜன் வரலாற்றில் விழுப்புரம் இதற்கு முன்னர் பிரம்மதேசம் என்பதற்கான சான்று மற்றும் ஜனநாத சதுருதி மங்கலம் என்கிற ராஜராஜன் பெயர் இருந்ததையும் அந்த கல்வெட்டில் தெரியவந்தது என வரலாற்று ஆய்வாளர் ரமேஷ் தெரிவித்தார்.