விழுப்புரம்: செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் குமார் (45). இவரது முதல் மனைவி குமாரி என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், திண்டிவனம் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்த மகாராணி(35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில் இரண்டாவது மனைவி மகாராணி என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே செந்திலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும் திருமணத்திற்கு பின்பு இருவரும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் குடும்பத்தில் பிரச்ணை ஏற்படவே அவரது குடும்பத்தினர் குமார் குடும்பத்தினரிடம் இது தொடர்பாக பல முறை முறையிட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று செந்தில் உறவினர்கள் குமார் குடும்பத்தினரிடம் இது குறித்து கேட்டபோது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து அனுப்பி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மின்விசிறியில் தூக்கில் சடலமாக மீட்பு


இன்று வீட்டு கதவை தட்டியபோது கதவை திறக்காததால் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இருவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்


இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

தற்கொலை (suicide)

 

தற்கொலை (suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் .

 

தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன . துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல் பொருகளை தவறாகப் பயன்படுத்துதலை தவிர்த்தல் முறையான செய்தி ஊடக அறிக்கையால் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்றவையும் தற்கொலைகளை குறைக்கும் வழிமுறைகளாகும் . நெருக்கடியான சூழல்கள் தற்கொலைக்குப் பொதுவானவை என்றாலும், அவற்றின் செயல்திறன் குறைவாகவே உள்ளது.