மேலும் அறிய

‘பட்டியல் இனத்தை பயன்படுத்தி புகார்’ இடுப்பில் கை வைத்த இளநிலை உதவியாளர்..?

திண்டிவனத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஊழியரே தானாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு பொய் என தெரியவந்துள்ளதாகவும், அந்த ஊழியரே தானாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதும் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நகர மன்ற உறுப்பினர் ரம்யா ; இளநிலை உதவியாளர் முனியப்பன் மோதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு தெருவிளக்கு பணி செய்ததிற்கு நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டியா? என முனியப்பனை திட்டியதாக தெரிகிறது.

ஒருமையில் பேசிய இளநிலை உதவியாளர் முனியப்பன்

இதனையடுத்து முனியப்பன் அந்த பணியை செய்யாமல் தட்டிகழித்து  ரம்யாவை ஒருமையில் பேசியதாக கூறபடுகிறது. இதனால் பாதிப்படைந்த நகரமன்ற உறுப்பினர் ரம்யா பொறுப்பு ஆணையர் சரவணனிடம் புகார் அளிக்க சென்றபோது புகாரை எழுத்து வடிவமாக அளிக்க ஆணையர் வலியுறுத்தியுள்ளார். அதன் பின்னர் எழுத்து வடிவமாக புகாரளிக்க ரம்யா சென்றபோது ஆணையர் இல்லாததால் மேலாளர் நெடுமாறன், வருவாய் அலுவலர் பழனி ,சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை ரம்யா புகாரளித்துள்ளார்.

தானாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் சிசிடிவி காட்சிகள் 

அப்போது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு முனியப்பனை அழைத்து விசாரித்துள்ளனர். பெண் கவுன்சிலரிடம் ஒருமையில் பேசிய புகாரால் உனது பதவி உயர்வு தடைபடும் என்று அறிவுறுத்திய போது, நகரமன்ற தலைவி கணவர் ரவிச்சந்திரன் முனியப்பனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு போ பா,  என தெரிவித்துள்ளார்.  திடீரென நகரமன்ற உறுப்பினர் முனியப்பன்,  ரம்யாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என அழுதுள்ளார். இதனால், முனியப்பனை அழைத்து செல்லுங்கள் என கூறி அலுவலக அறையிலிருந்து வெளியே அனுப்பியிருக்கின்றனர் அதிகாரிகள். ஆனால், இச்சம்பவத்தில் அரசு ஊழியரை மன்னிப்பு கேட்க சொல்லியதோடு காலில் விழ வைத்ததாக திமுக, அதிமுக, விசிக நகர உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி விசாரணை செய்ய வேண்டுமென  நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்ட இளைநிலை உதவியாளர் முனியப்பன்

அந்த புகாரின் பேரில் விசாரனை செய்ததில் அரசு ஊழியர் முனியப்பன் தானாகவே காலில் விழுந்து மன்னிப்பு கேட்பட்து சிசிடிவி கேமராக காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மன்னிப்பு கேட்கும் போது ரம்யாவின் காலில் விழுந்த முனியப்பன் தனது கையை ரம்யாவின் இடுப்பில் வைத்து மன்னிப்பு கேட்டதால் பெண் கவுன்சிலரிடம் தவறான சீண்டலில் ஈடுபட்டதாக கூறி திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Skoda Offers: 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்! தாறுமாறு தள்ளுபடி தந்த ஸ்கோடா - எந்தெந்த காருக்கு?
Skoda Offers: 3.50 லட்சம் ரூபாய் வரை ஆஃபர்! தாறுமாறு தள்ளுபடி தந்த ஸ்கோடா - எந்தெந்த காருக்கு?
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

ஜெ.வின் ஆன்மீக வழிகாட்டி இன்று விஜய்யின் சிறப்பு அதிகாரி! யார் இந்த ரிக்கி ரதன்
வேலுமணி CV சண்முகம் உட்பட 26 பேரின் பதவிகள் பறிப்பு எடப்பாடி அதிரடி
சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!
DRUGS-க்கு END உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி CM விஜய் அதிரடி மூவ் யார் இந்த அஸ்ரா கார்க்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: OPS-ஐ விரட்டிவிட்ட பாவத்திற்குத்தான் தண்டனை அனுபவிக்கிறோம்.. சிவி சண்முகம் புலம்பல்
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
CV Shanmugam: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அதிமுக.. சிவி சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: வைகாசி மாத பூஜைக்கு 5 நாள் சிறப்பு வழிபாடு...
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
MK Stalin: இருக்கு சம்பவம் இருக்கு! திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேனிக்கு டூர் போறீங்களா? வைகை அணை பூங்காவை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!
Amul Milk Price Hike: நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு; வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுல்
CM Vijay on NEET: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
“நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
Embed widget